2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘மனுக்களை மீளபெற்றால் நினைவேந்தலை நினைவுகூரலாம்’

Editorial   / 2020 செப்டெம்பர் 21 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

இந்த அரசாங்கமானது, பொதுவான  அரசியல் தீர்மானமொன்றை எடுத்து, பொலிஸாரால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை மீளபெறப்பெறும் பட்சத்தில், தமிழ் மக்களால் திலீபனின் நினைவேந்தலை நினைவுகூர முடியுமென, வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். 

இது எந்தவிதத்திலும், நீதிமன்ற விடயத்தில் ஜனாதிபதி தலையிடுவதாக கருத முடியாதெனவும், அவர் கூறினார்.

இன்று (21) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிப்பதற்கு, நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை நீக்கக் கோரி, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தமிழ்க் கட்சிகளால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் குறித்து, அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்த கருத்துத் தொடர்பில் கருத்துரைத்த போதே, சிவஞானம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .