2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘10 வரும் வரை போராட்டம் ஓயாது’

Editorial   / 2018 ஜனவரி 03 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கர்ணன், எம்.றொசாந்த்

“தமது பாடசாலையில் தரம் 10 வகுப்பை ஆரம்பிக்க அனுமதி வழங்கும் வரை தாங்கள் போராட்டத்தில் ஈடுபடுதாக, வரதராஜப் பெருமாள் வித்தியாலய மாணவர்களும் அம்மாணவர்களின் பெற்றோர்களும் தெரிவித்துள்ளனர்.

பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாலயத்தில் 10ஆம் தரத்தை ஆரம்பிக்குமாறு கோரி, மாணவர்கள் மற்றும் பெற்றோர் மேற்கொண்டு வரும் போராட்டம், இன்று (03) இரண்டாவது நாளாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது. இதன்போதே, அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

மேற்படி பாடசாலையில் தற்போது தரம் 09 வரையான வகுப்புக்களே நடைபெற்று வருகின்ற நிலையில், இங்கு க.பொ.த சாதாரண தர வகுப்புகளை ஆரம்பிக்குமாறு, பழைய மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக, பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளர் ந.பொன்ராசா கருத்துத் தெரிவிக்கையில்,

“இவ்வருடத்தில் இருந்து தரம் 10ஐ ஆரம்பிக்குமாறு, வலிகாமம் வலயக் கல்வி அலுவலகத்துக்கு கடந்த நவம்பர் மாதம் 28ஆம் திகதி கடிதம் சமர்ப்பித்திருந்தோம். ஒரு மாதம் தாமதித்து டிசெம்பர் மாதம் 28ஆம் திகதி, இவ்வருடம் தரம் 10 வகுப்பை ஆரம்பிக்க முடியாது என, வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.

“இப்பாடசாலையில் தரம் 9இல் கல்வி கற்றுவிட்டு வேறு பாடசாலைகளுக்குச் செல்பவர்கள் உரிய போக்குவரத்து வசதிகள் இன்மையால் இடைவிலகுகின்றனர். இதனால் இக்கிராமம் கல்வியில் தொடர்ச்சியாகப் பின்னடைந்து வருகின்றது” எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .