2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இராமாவில் முகாமிலுள்ள பாடசாலை வடமராட்சி வலயத்தால் பொறுப்பேற்கப்பட்டது

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 05 , பி.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

தென்மராட்சியில் உள்ள இராமாவில் இடைத்தங்கல் முகாமில் இயங்கும் பாடசாலை, தென்மராட்சி கல்வி வலயத்தின் மேற்பார்வையின் கீழ் இயங்கி வந்துள்ளது. இம்முகாமில் 297 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். தற்போது இம்முகாமில் வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, கேவில், சுண்டிக்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும் இணைந்து கல்வி கற்று வருகின்றனர்.

இம் மாணவர்களுக்கான கல்வியினை கற்பிப்பதற்கும் நிர்வாகத்தினை நடத்துவதற்கும் சிரமமாக உள்ளமையால் வடமராட்சி வலய கல்விப் பணிப்பாளரை பொறுப்பேற்று நடத்துமாறு கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் பணித்ததோடு யாழ். வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலய அதிபர் எஸ்.செல்வக்குமாரை நிர்வகிக்குமாறும் கேட்டுள்ளார். இதனால் இப்பாடசாலையில் கல்வி கற்பிப்பதற்கு வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலயம், வெற்றிலைக்கேணி றோ.க.த.க. பாடசாலை, கேவில் அ.த.க. பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை கடமையாற்ற வருமாறு வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் வ.செல்வராஜா கேட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .