2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மக்களின் நலன்கள் பாதிக்கப்படாத வகையில் சேவைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்: டக்ளஸ்

Menaka Mookandi   / 2014 மார்ச் 24 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுமக்களின் நலன்கள் பாதிக்கப்படாத வகையில் மக்களுக்கான சேவைகள் முன்னெடுக்கப்படும் அதேவேளை, பிரதேசங்களின் அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டிற்கு துறைசார்ந்தோர் ஒன்றிணைந்து உழைக்க வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (23), அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ். பிராந்திய கிளையின் பிரதிநிதிகள் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது பகுதிகளின் அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டிற்காக எல்லோரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும். பொதுமக்களின் நலன்களை மேம்படுத்தும் வகையிலும், அவர்களது சுத்தம் சுகாதாரத்தை பேணும்வகையிலும் திட்டங்கள் முன்மொழியப்பட்டு அவை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.

குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது பகுதிகள் தற்போது அரசின் பல்வேறு திட்டங்களின் ஊடாக அபிவிருத்தியும் முன்னேற்றமும் கண்டுவரும் நிலையில் அதற்கு துணையாக துறைசார்ந்த அனைவரும் ஒன்றிணைந்த பங்களிப்பை வழங்க வேண்டுமெனவும், எனவே இருதரப்பு இணக்கப்பாட்டுடன் கடமைகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இக்கலந்துரையாடலில் யாழ்.மாவட்டத்திலிருந்து வலி. வடக்கு, வலி. தென்மேற்கு மற்றும் நல்லூர் பிரதேச சபைகளிலிருந்து மீளப் பெறப்பட்ட பொதுச்சுகாதார பரிசோதகர்களை சுகாதார திணைக்களத்திற்கு மீள உள்வாங்கப்பட்டமை தொடர்பிலுள்ள இடர்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர், துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி கேட்டறிந்து கொண்டார்.

இதனிடையே பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பிரதேச சபைகளின் ஊடாக ஆற்றுகின்ற கடமைகள் மற்றும் பணிகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், வடமாகாண  சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி டாக்டர் யூட், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கேதீஸ்வரன், ஈ.பி.டி.பியின் வலிகாமம் இணைப்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் (ஜீவன்) ஆகியோர் உடனிருந்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X