2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மும்மொழித் திட்டம் நாட்டை ஒருங்கிணைக்கும்: மகாலிங்கம்

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 06 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா, சொர்ணகுமார் சொரூபன்


இலங்கையில்  மும்மொழித் திட்டத்தினை அரசாங்கம் அமுல்படுத்துவது நாட்டினை ஒருங்கிணைக்கும் ஒரு நடவடிக்கை என்று யாழ் இந்திய துணைத்தூதரக கொன்சலேட் ஜெனரல் வே. மகாலிங்கம் தெரிவித்தார்.

யாழ்., கோப்பாய் கல்வியற் கல்லூரியில் இன்று (06) நடைபெற்ற மும்மொழிக் கற்கை நெறி ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'இலங்கைக்கு இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வருகை தந்த போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாட்டில் மும்மொழிக்கொள்ளையை அமுல்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்.

இதற்கமைவாக அரசாங்கம் வடக்கில் இந்த மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் நோக்கில் இன்று அதற்கான ஆரம்ப நிகழ்வை நடத்தியிருக்கின்றது. அரசாங்கத்தின் இந்த திட்டத்தை அமுல்படுத்தியிருக்கின்றமை எமக்கு மகிழ்ச்சியளிக்கின்றது' என்றார்.

அத்தோடு, 'இந்த மும்மொழித் திட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையினையும் ஏற்படுத்த முடியும் என்று கருதுவதாக அவர் தெரிவித்தார்.

இந்தியாவில்  2500 பேச்சு மொழிகளும், 100 மேற்பட்ட எழுத்து மொழிகளும் இருந்தாலும்  தேசிய மொழியாக ஹிந்தி இருக்கின்றது. எனது 25ஆவது வயதில் நான் டில்லிக்குச் சென்றபோது தான் முதல் தடவையாக ஹிந்தியைக் கற்றுக்கொண்டேன்.

நாங்கள் எங்கள் வெளிவிவகார கடமைகளின் நிமிர்த்தம் வேறு நாடுகளுக்குச் செல்லும் போது அந்த நாட்டின் மொழிகளைக் கற்றுக்கொண்டால் அங்கு எமது கடமைகளை இலகுவாக செய்துகொள்ள முடியும்.

நான் முதல் முதல் இந்தோனேஷியாவில் கடமையாற்றும் போது அந்த நாட்டின் மொழியை ஒரு வருடத்திற்குள் கற்றுக்கொண்டேன். தற்போது நான் இந்தோனேஷியாவிற்குச் சென்றால் அந்நாட்டு மக்கள் தங்களில் ஒருவராகத்தான் என்னைக் கருதுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

எனவே மொழிகளைக் அரைகுறையாக கற்பதை விடுத்து முழுமையாக கற்று சிறந்த அடைவை பெறவேண்டும். அத்துடன் இந்த மும்மொழித்திட்டம் சிறந்த திட்டமாக முழுமையான வெற்றியடைய எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என்று அவர் தெரிவித்தார்.

மொழி எவ்வளவு முக்கியமானது என்பதற்காக நான்ஒரு குட்டிக் கதையினைக் கூறுகின்றேன் ஒரு குட்டி நுளம்பு இருந்தது. அந்த நுளம்பு பறக்க ஆரம்பிக்கும் போது அந்த நுளம்பினுடைய தாய் சொன்னது, குழந்தாய் பாதுகாப்பாகச் சென்று திரும்பி வா, மனிததர்கள் மிகவும் மோசமானவர்கள், உன்னைக் கொன்றுவிடுவார்கள் என்று.

குட்டி நுளம்பு பறந்து சென்றுவிட்டு உயிருடன் திரும்பி வந்தது. அப்போது தாயைப்பார்த்து அந்த நுளம்பு அம்மா நீ ஏதேதோ சொன்னாய், போகும் போது என்னைக் கொண்றுவிடுவார்கள் என்று, ஆனால் நான் பறக்கும் போது ஒவ்வொருவரும் என்னைப்பார்த்து கைதட்டினார்கள் என்றது.

அந்தக் குட்டி நுளம்பிற்குத் தெரியவில்லைப் பாவம் தன்னைக் கொல்வதற்காகத்தான் அவர்கள் கைதட்டினார்கள் என்று. அது நினைத்தது, தான் பறப்பதைப் பாத்த்துத்தான் எல்லோரும் கைட்டினார்கள் என்று.

இதில் இருந்து நாம் ஒன்றினை விளங்கிக்கொள்ள வேண்டும், நாம் ஒரு மொழியையோ அல்லது வேறு எவற்றையோ கற்க வேண்டுமானால் அதனை முழுமையாகக் கற்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .