2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

தபாலட்டை போராட்டம் ஆரம்பம்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 19 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்


தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு 1 இலட்சம் தபாலட்டைகள் அனுப்பும் நடவடிக்கையை முற்போக்கு தமிழ் தேசிய கட்சி, நேற்று சனிக்கிழமை (18) முதல் ஆரம்பித்தது.

அக்கட்சியின் செயலாளர் நாயகம் சுதர்சிங் விஜயகாந்த் தலைமையில் யாழ்.பிரதம தபால் நிலையம் சென்ற குழுவினர், முதற்கட்ட தபாலட்டை அனுப்பும் நடவடிக்கையை ஆரம்பித்தனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் மாவட்ட செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் மற்றும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு பின்பாக உண்ணாவிரத போராட்டம் ஆகியவற்றை முற்போக்கு தமிழ் தேசிய கட்சி முன்னெடுத்தது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த கட்சியின் செயலாளர் நாயகம், 'தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான போரட்டத்தை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாங்கள் அதிகப்படுத்த வேண்டும். அப்போது தான், தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க முனைவார்கள்' என்று கூறினார்.

'இந்த போராட்டத்தில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இதன் முதற்கட்டமாக 100 தபாலட்டைகளை அனுப்பியுள்ளோம். எதிர்வரும் 24ஆம் திகதிக்கு முன்னர் 1 இலட்சம் தபாலட்டைகளை அனுப்ப நடவடிக்கை எடுப்போம் என அவர் மேலும் கூறினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .