2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

64 நாட்களைக் கடந்தும் தொடர்கிறது போராட்டம்

செல்வநாயகம் கபிலன்   / 2017 செப்டெம்பர் 12 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

64 நாட்களைக் கடந்தும் புத்தூர் கலைமதி மக்களின் சாத்வீகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட முதலமைச்சர் தமது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலும் தமது கோரிக்கையை கேட்டறிந்து செல்லவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் ஆதங்கம் வெளியிடுகின்றனர்.

புத்தூர் கலைமதி பகுதியில் அமைந்துள்ள மயானத்தை அகற்றுமாறு கோரி பிரதேச மக்களால் கடந்த ஜீலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட சாத்வீகப் போராட்டம் 64 நாட்களைக் கடந்தும் எதுவித தீர்வும் இன்றி முன்னெடுக்கப்பட்டு வரப்படுகிறது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், “தென்னிலங்கை பகுதியில் இருந்தும் பல்வேறு தரப்பட்ட மக்கள் எமது போராட்ட இடத்துக்கு வருகை தந்து எமது கோரிக்கை நிஜயமானது என கூறி ஆதரவு தெரிவித்து வரும் நிலையிலும் அண்மையில் விஜயம் செய்த வடக்கு மாகாண ஆளுர் எமது கோரிக்கையை ஏற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருந்தபோதும் முதலமைச்சர் பாரமுகமாக நடந்து கொள்வது ஏன்” என்று கேள்வி எழுப்புகின்றனர்.

“எமது கோரிக்கை நியாயமானதா அல்லது நியாயத்துக்குப் புறம்பானதா என்பதை நேரில் வந்து பார்வையிடுமாறு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். புகைத்தல் புற்றுநோயை உண்டாக்கும் எனக் கூறி பல்வேறு பதாகைகள் வாகனங்களிலும் பொதுவிடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இறந்த ஒருவரை எரிக்கும்போது அதிலிருந்து வெளிவரும் புகை, மனித உடல்நலத்துக்கு உகந்ததா? பிணப் புகையை சுவாசிக்க நாங்கள் விலங்குகளா?” என மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

குறித்த ஊரைச் சுற்றி நான்கு மாயணங்கள் இருக்கும்போது ஒரு சிலரின் ஆதிக்கப்போக்கான தன்மையே, கைவிடப்பட்டிருந்த மயானத்தை மீளவும் கட்டுமானப் பணிக்கு உட்படுத்தும் நிகழ்வு என தெரிவிக்கப்படுகிறது.

இப்பிரச்சினை தொடர்பில், உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் சரியான முடிவு எடுக்கவேண்டியது முதலமைச்சரே எனப் போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .