2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

அமெஸோனில் போலி USB-C cable விற்பனைக்குத் தடை

Shanmugan Murugavel   / 2016 ஏப்ரல் 02 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலியான சில USB-C cableகள், திறன்பேசிகளிலும் மடிக்கணினிகளும் பாரிய பிரச்சினைகளை உருவாக்கியிருந்த நிலையில், போலியான USB-C cableகளுக்கு எதிராக போராடுபவர்களுக்கு நற்செய்தி கிடைத்துள்ளது. அதாவது, தான் விற்பனை செய்யும் USB-C cableகளுக்கான கட்டுப்பாடுகளை இறுக்கியுள்ளது.

இணைய விற்பனைத்தள ஜாம்பவானான அமெஸோன் ஆனது, தனது இணையத்தளத்தில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள பொருட்களின் வரிசையில், திருட்டு டி.வி.டி, ஒழுங்கு முறைக்குள் வராத மின் பொருட்கள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த வரிசையில், ஒழுங்கு விதிமுறைக்குள் வராத USB-C cableகளையும் உள்ளடக்கியுள்ளது.

USB Implementers Forum நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள நியமங்களுடன் ஒத்து வராத எந்தவொரு USB-C cable அல்லது adapterஐ விற்பனை செய்ய முடியாது என அமெஸோன் இணையத்தள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இங்கு, போலியான USB-C cable என்று குறிப்பிடப்படுவது யாதெனில், பாதிப்பை ஏற்படுத்தும் அல்லது முழுமையாக சாதனத்தைநிறுத்தும் USB-C cableகளே அமெஸோனால் தடை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, விற்பனையாளர் சமூகத்தை அமெஸோன் கண்காணிக்க வேண்டியுள்ளதுடன் யாராவது தொடர்ந்து இதை மேற்கொண்டால் அதனை நிறுத்த வேண்டியுள்ளது.

போலியான USB-C cableகளால் பாதிப்பு ஏற்படுகின்றது என்ற சிறிய ஆனால் ஆக்கபூர்வமான தகவல், பென்ஸோன் லீயுங் என்ற கூகுளின் பொறியியலாளர் ஒருவராலேயே கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .