2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஒரு மாதத்தில் மூன்றாவது மின் கார் மீளப்பெறப்பட்டது

Shanmugan Murugavel   / 2016 ஏப்ரல் 01 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவிலுள்ள ஆயிரக்கணக்கான e-Golf கார்களை Volkswagen திரும்பப் பெற்றுள்ளது. பாவனையிலிருக்போதே அவற்றினது மோட்டர்கள் நிறுத்தப்படும் பிரச்சினை காரணமாகவே மேற்படிக் கார்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது, அண்மைய வாரங்களுக்குள் மின் கார்கள் மீளப் பெறப்படும் மூன்றாவது சந்தர்ப்பமாக பதிவாகியுள்ளது. இம்மாத ஆரம்பத்தில், தனது Leaf வாகன தடுப்பியை கட்டுப்படுத்தும் மென்பொருளை மீள வடிவமைக்க வேண்டும் என Nissan தெரிவித்திருந்தது. அதனையடுத்து சில நாட்களின் பின்னர், தனது Zoe கார்களிலுள்ள தடுப்பிகளைச் சோதனை செய்ய வேண்டும் என்றும் பிழையான தடுப்பிகளை பிரதியீடு செயீய வேண்டும் எனவும் Renault தெரிவித்திருந்தது.

எவ்வாறெனினும் மேற்கூறப்பட்ட பிரச்சினைகள் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை என்றே தெரிகின்றது. எனினும், மின் கார்களிலுள்ள தொழில்நுட்பம் புதியதும் சிக்கலானது என்றும் ஆகையால் மேற்படி அறிவிப்புக்கள் ஆச்சரியமளிக்கவில்லை என துறைசார் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தினாலேயே, Volkswagen கார்கள் திரும்பப் பெறப்படுவது தொடர்பான விபரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டிருந்தன. வாகனங்கள் எதிர்பாராதவிதமாக நிற்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாகவும் இதனால் விபத்துகளுக்கான வாய்ப்பு அதிகாரிக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 2014ஆம் ஆண்டு இறுதியில் ஐக்கிய அமெரிக்காவில் முதன்முறையாக e-Golfகள் விற்பனைக்கு வந்த நிலையில், விற்பனையாகத 157 மாதிரிகள் உட்பட ஐக்கிய அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட 5,561 மாதிரிகளும் திரும்பப் பெறுதலில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X