2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சந்திரயான் 3 விண்ணில் ஏவப்படும் திகதி அறிவிப்பு

Editorial   / 2019 நவம்பர் 14 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்திரயான் 3 அடுத்த வருடம் நவம்பர் மாதம் விண்ணில் பறக்கும் என்றும், அதில் அனுப்பப்படும் லேண்டர் சாதனையை நிகழ்த்தும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நிலவின் தென் துருவத்தை ஆராயும் வகையில், சந்திரயான் 2 விண்கலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவால் அனுப்பப்பட்டது. 

சந்திரயான் 2ல் அனுப்பப்பட்ட ஆர்பிட்டரும் ரோவரும் இப்போதுவரை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. எனினும், சந்திரயான் 2 விண்கலத்தில் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் தனது தொடர்பைத் துண்டித்துக் கொண்டது.

இந்த நிலையில், இஸ்ரோ இப்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் நவம்பர் மாதம் 2020ல் சந்திரயான் 3 விண்வெளிக்கு அனுப்பப்படும் எனக் கூறியுள்ளது. 

அதேபோல், சந்திரயான் 3ல் லேண்டர், ரோவர் இருக்கும் என்றும் கூறியுள்ளது. இந்த திட்டத்தில் ஆர்பிட்டர் அனுப்பும் திட்டமில்லை என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

இப்போதுள்ள ஆர்பிட்டர் சிறப்பாகச் செயல்படுவதால், ஆர்பிட்டர் தேவையில்லை என இஸ்ரோ விஞ்ஞானிகள் கருதியுள்ளனர்.

சந்திரயான் 3ஆல் அனுப்பப்படும் லேண்டர் குறித்து இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், ‘இப்போது நாங்கள் திட்டமிட்டுள்ள லேண்டர் அனைத்து சூழல்களையும் எதிர்கொள்ளும், அதன் கால்கள் மிக வலிமையாக இருக்கும், இந்த முறை லேண்டர் தரை இறங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லாத வகையில் நாங்கள் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்’ என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X