2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சக்கர நாற்காலிகள் இனி தேவையில்லை: இலத்திரனியல் கால்கள் அறிமுகம்!

A.P.Mathan   / 2010 ஜூலை 16 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு எழும்பி நடமாட முடியாமல் தவிக்கின்றவர்களுக்கு இனிப்பான செய்தியொன்றினை நியூஸிலாந்து உயிரியல் தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்திருக்கிறது.

ஹெய்டன் அல்லன் என்பவர் 5 வருடங்களின் முன்னர் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டிருந்தார். இனிமேல் அல்லனினால் எழுந்து நடமாட முடியாது என மருத்துவர்கள் கூறியிருந்தார்கள். அதன்பின்னர் அல்லனின் வாழ்க்கை சக்கர நாற்காலியுடனேயே கழிந்தது.

இவரது கஷ்டத்தினை உணர்ந்த நியூஸிலாந்தின் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனம், புதியதொரு ‘றெக்ஸ்’ என்னும் ரோபோ கால்களை உருவாக்கியிருக்கிறது. இடுப்பிலிருந்து கால்கள்வரை இந்த ‘றெக்ஸ்’ பிணைக்கப்பட்டிருக்கும். அதன்பின்னர் ஜொய்ஸ்டிக் துணையுடன் இந்த ரோபோ கால்களை இயக்க முடியும்.

சாதாரணமாக ஒரு மனிதன் என்னென்ன வேலைகளை செய்கின்றானோ, அதோபோல் பாரிசவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களும் எழுப்பி நடந்து சகல வேலைகளையும் செய்யக்கூடியதாக இருக்கிறது. இந்த இயந்திரத்தின் வருகையானது பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் இனிப்பான செய்தியை தந்திருக்கிறது.

‘றெக்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தினர் இந்த கண்டுபிடிப்புப் பற்றி குறிப்பிடுகையில், எமது இந்த இயந்திரக் கால்கள் 2011ஆம் ஆண்டில் நடுப்பகுதியில் உலக சந்தைக்கு விடப்படும். பாதிக்கப்பட்ட மக்களின் முகத்தில் சந்தோஷத்தினைக் காண்பதே எமது நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ரோபோ கால்களின் தற்போதைய விலை 150,000 அமெரிக்க டொலர்களாகும். அதாவது கிட்டத்தட்ட 17 மில்லியன் ரூபாய்!




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .