2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கூகுளின் பன்மொழி மொழிபெயர்ப்பு சேவையில் தமிழும் இணைப்பு

Super User   / 2011 ஜூன் 23 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கூகுள் இணையத்தளத்தின் பன்மொழி மொழிபெயர்ப்புச் சேவையில் இப்போது தமிழ் மொழியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

தமிழ், வங்காளம், கன்னடம், தெலுங்கு, குஜராத்தி ஆகிய 5 இந்திய மொழிகளை புதிதாக தனது இணைய மொழிபெயர்ப்பு சேவையில்  கூகுள் நிறுவனம் இணைத்துக்கொண்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய இணைய தேடல் இயந்திர இணையத்தளமான கூகுள் குழுமம் 2006 ஆம் ஆண்டு இணையம் மூலமான பன்மொழி மொழிபெயர்ப்பு சேவையை ஆரம்பித்தது. இப்போது புதிதாக இணைக்கப்பட்ட 5 மொழிகளுடன் சேர்த்து இந்த மொழிபெயர்ப்புத் தொகுதியிலுள்ள மொழிகளின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.

இதன்மூலம், தமிழ் மொழியிலுள்ள வசனங்களை ஏனைய 62 மொழிகளில் மொழிபெயர்க்கவோ அல்லது அம்மொழிகளில் உள்ளவற்றை தமிழுக்கு மொழிபெயர்க்கவோ முடியும்.

ஏற்கெனவே தமிழும் உள்ளடக்கப்பட்ட இணையம் மூலமான பன்மொழி அகராதிகள் உள்ளன.

எனினும் கூகுள் இணைய மொழிபெயர்ப்பு சேவையானது வசனங்களையும் மொழிபெயர்க்கும் ஆற்றல் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுளுக்கே உரிய துரித வேகத்தை இந்த மொழிபெயர்ப்புச் சேவை கொண்டுள்ளது. யுனிகோட் எழுத்து விரிவடிவங்களையே (font) இது கிரகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனைய இணைய அகராதிகளைவிட அதிகமான பிறமொழி சொற்களுக்கான தமிழ் அர்த்தங்களையும்  தமிழ்சொற்களுக்கான பிறமொழி சொற்களையும் கூகுள் மொழிபெயர்ப்பு சேவை வழங்குகிறது.

வழங்கப்படும் மொழிபெயர்ப்பில் காட்டப்படும் சொற்கள் பொருத்தமற்றவை எனக் கருதினால் அச்சொற்களை  அழுத்துவதன் மூலம் பொருத்தமான வேறு சில மாற்றுச் சொற்களையும் தெரிவு செய்துகொள்ளும் வசதியும் உண்டு.

ஆனால், நாம் பரீட்சித்தவரை நீண்ட வசனங்களுக்கான  கூகுள் தமிழ் மொழிபெயர்ப்பு மிகத் துல்லியமானதாக  இல்லை.  தமிழ் முதலான தென்னிந்திய மொழிகளின் வசன அமைப்பு முறைக்கும்; ஆங்கிலம் முதலான ஐரோப்பிய மொழிகளின் வசன அமைப்பு முறைக்கும் இடையிலான வித்தியாசமே இதற்குக் காரணம்.  மரபுத்தொடர்கள் முதலானவற்றுக்கான மொழிபெயர்ப்பும் கிடைக்கவில்லை.

பரீட்சிப்பதற்காக, ஆங்கிலத்திலுள்ள ஒரு வசனத்தை தமிழுக்கு மொழிபெயர்ப்பதற்கான கட்டளையை கொடுத்தபொது அம்மொழிபெயர்ப்பு துல்லியமாக இல்லாவிட்டாலும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்ததது.

ஆனால், அதே கூகுள் மொழிபெயர்த்துத் தந்த அதே தமிழ் வசனத்தை மீண்டும் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து பார்த்தபோது அது வந்த பெறுபேற்றுக்கும் அசல் ஆங்கில வசனத்திற்கும் இடையிலான முரண்பாடு  'பயங்கரமானதாக' இருந்தது.

புதிதாக இணைக்கப்பட்ட மொழிகளின் மொழிபெயர்ப்பானது பரிசோதனை நிலையில் உள்ளதாக கூகுள் நிறுவனம் கூறுகிறது.

'ஏதேனும் மொழியில் தவறான மொழிபெயர்ப்பை  அவதானித்தால் எமக்கு அறியத்தாருங்கள். நாம் எமது தவறுகளிலிருந்து கற்றுக் கொள்கிறோம்' என கூகுள் நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி விஞ்ஞானியான ஆஷிஸ் வேணுகோபால் கூறியுள்ளார்.

எவ்வாறெனினும் தமிழ்பேசும் மக்களுக்கும் உலகின் ஏனைய பிரதான மொழிபேசுவோருக்கும் இடையிலான தொடர்பாடலில் கூகுள் மொழிபெயர்ப்பு சேவையும் அதை பின்பற்றி வரக்கூடிய இத்தகைய இணைய மொழிபெயர்ப்புச் சேவைகளும் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

 (ஆர்.சேதுராமன்)

கூகுள் இணைய மொழிபெயர்ப்பு சேவை


You May Also Like

  Comments - 0

  • Nesan Thursday, 23 June 2011 11:14 PM

    நான் கிறுக்கிய கவிதைகளையெல்லாம் மொழிபெயர்க்க முடியுமா?

    Reply : 0       0

    ruthra Thursday, 23 June 2011 11:21 PM

    மொழிபெயர்ப்பாளர்களே புதிய முயற்சியில் இறங்குங்கள். எதிர்காலத்தில் மொழிபெயர்ப்பாளர்கள் என்ற வார்த்தையையே அகராதியிலிருந்து தூக்கிவிட வேண்டிய நிலைமை தோன்றப்போகிறது.

    Reply : 0       0

    rogini Thursday, 23 June 2011 11:27 PM

    இந்த புதிய விடயத்தை கூகுள் அறிமுகப்படுத்தியது வரவேற்க வேண்டியது. ஆனால் இது பல விடயங்களுக்கு முட்டுக்கட்டையாக அமைந்து விடுகின்றது. உதாரணத்திற்கு ஒன்றை கூற விரும்புகின்றேன். இலங்கையை பொறுத்தவரை ஆங்கில அறிவு பலருக்கு போதாமையாகவே உள்ளது. ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிக்கு மொழிபெயர்ப்புகளை செய்யும்போது ஆங்கில சொற்களின் அர்த்தங்களை அறிந்துக் கொள்ள கூடியதாக உள்ளது. இவ்வாறு பல விடயங்களை ஆங்கில - தமிழ் மொழிப்பெயர்பினூடாக பெற்றுக்கொள்கின்றோம். ஆனால் இவ்வாறான புதிய தொழில்நுட்பங்களின் வருகையால் அந்த தேடல் முயற்சிக்கு முற்றுப்புள்ளியிடப்படுகின்றது.

    Reply : 0       0

    Niththi Friday, 24 June 2011 06:08 PM

    கவிஞர் வைரமுத்து - இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவான சின்ன சின்ன ஆசை பாடலை கூகுளில் மொழிபெயர்க்கும் சின்ன சின்ன ஆசை எனக்கு வந்தது.

    "சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை
    முத்து முத்து ஆசை முடிந்துவிட ஆசை
    வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை
    என்னையிந்த பூமி சுற்றிவர ஆசை


    மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை
    தென்றலைக் கண்டு மாலையிட ஆசை
    மேகங்களை எல்லாம் தொட்டுவிட ஆசை
    சோகங்களை எல்லாம் விட்டுவிட ஆசை
    கார்குழலில் உலகைக் கட்டிவிட ஆசை

    சேற்று வயலாடி நாற்று நட ஆசை
    மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை
    வானவில்லைக் கொஞ்சம் உடுத்திக்கொள்ள ஆசை
    பனித்துளிக்குள் நானும் படுத்துக்கொள்ள ஆசை
    சித்திரத்து மேலே சேலை கட்ட ஆசை"

    என்ற வரிகளுக்கு கூகுள் தந்த மொழிபெயர்ப்பு பின்வருமாறு:

    I wish I wish cirakatikka
    I wish pearl pearl expire
    Vennilavu ​​desire to kiss and touch
    Ennaiyinta revolve around the earth's


    Jasmine wants to become puvay
    I wish breeze malaiyita
    Tottuvita desire mekankalaiellam
    Desire to leave all the sorrow
    The world wants karkulal kattivita

    Desire to walk in mud seedling vayalati
    Than the desire to catch fish in the river again
    I do not want the sky a little worn
    I want to lie down panittulikkul
    I wish to sketch a sari.

    Reply : 0       0

    xlntgson 0776994341;0716597735 sms only Friday, 24 June 2011 09:26 PM

    இதை நான் பரீட்சித்துப் பார்க்கப்போவதில்லை, எனக்குத் தெரிந்த ஆங்கிலமும் குழம்பிவிடும்! தமிழ், சொல்லத்தேவை இல்லை!
    ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது! அப்படி என்றால் எல்லா பாடசாலைகளையும் கல்லூரிகளையும் மூடி விட வேண்டியது தான், ஆசிரியர்கள் எதற்கு? ஒரு வழியில் கணணி அறிவை விட ஆங்கில அறிவு சாதாரணமாக தமிழர் மத்தியில் நன்கு இல்லாவிட்டாலும் பரிச்சயமாகவேனும் திகழ்கிறது, அடுத்த தலைமுறையினர் பயன்படுவார்களோ தெரியாது!
    கணனித் தமிழ் ஆங்கிலத்தின் ஊடாகத்தான் வளர்கிறது சுத்த தமிழ் கணனியில் வரும் என்று நான் நினைக்கலை.

    Reply : 0       0

    fayas Monday, 04 July 2011 02:38 AM

    ஹலோ சார்??உங்களுக்கு கணனி பற்றி தெரியாததுக்கு நாங்கள் என்ன செய்வது? தெரியாட்டி தெரிய என்று சொல்லுங்களன்.

    Reply : 0       0

    fayas Monday, 04 July 2011 02:39 AM

    பெரிசா பேசாதிங்க ஆங்கில வித்துவான் .......இது ஒரு நல்ல வெற்றி enkalukku .....

    Reply : 0       0

    fayas Monday, 04 July 2011 02:43 AM

    இல்லாட்டிதான் எல்லாரும் ஆங்கிலம் மேதையர்கள்தானே???? இப்படி பட்ட ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரை எவரும் முன்னேற முடியாது .....

    Reply : 0       0

    mohamed Wednesday, 06 July 2011 09:53 PM

    paithiyangal anaithaiyum izanal seiya mudiyadu

    Reply : 0       0

    MIYAD Sunday, 07 August 2011 10:08 PM

    இது ஒரளவிற்கேனும் ENGLISH நாவல்களை படிபதற்கு உதவுகின்றது.

    Reply : 0       0

    Salamdeen Saturday, 20 August 2011 12:25 PM

    உங்கள் முயற்சிக்கு நல்வாழ்த்துக்கள் நானும் ஒரு மொழிபெயர்ப்பாளன் என்ற vahaiyil இதனை வரவேற்கிறேன். நன்றி

    Reply : 0       0

    vvjee Tuesday, 06 September 2011 07:20 AM

    எனது நன்றீகள்

    Reply : 0       0

    J. G. Edward Pieris Monday, 12 September 2011 04:34 PM

    ஒரு மொழிபெயர்ப்பாளன் என்ற வகையில் நானும் இம் முயற்சியை வரவேற்கிறேன். ஆனால் உட் பிரிவுகள் பலவற்றை உள்ளடக்கிய கூட்டு வாக்கியம் ஒன்றை இலக்கண சுத்தமாக மொழிபெயர்க்க முடியுமா என்பது சந்தேகமே.

    Reply : 0       0

    J.M. Azhar Thursday, 22 September 2011 12:40 PM

    முயற்சி நல்லதுதானே!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .