2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

5ஜி சேவையை இன்னும் வரல... அதுக்குள் 6Gக்கு அடி போட்ட சீனா

Editorial   / 2019 நவம்பர் 10 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

5ஜி சேவை வழங்க உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில் சீனா 6ஜி சேவையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 

 மின்னல் வேகத்தில் இணைய பயன்பாட்டுக்கு உதவும் 5ஜி தொழில்நுட்பம் உலகின் ஒருசில நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது சீனாவிலும் இந்த சேவை தொடங்கிவிட்டது. 

ஒரு முழு திரைப்படத்தை 10 வினாடிகளில் பதவிறக்கம் செய்துவிடும் அளவுக்கு வேகமுள்ள 5ஜி தொழில்நுட்பத்திற்கு வாடிக்கையாளர்கள் அனைவரும் விருப்பத்தோடு மாறி வருகின்றனர்.
 
சீனாவின் சீனா மொபைல், சீனா யூனிகாம், சீனா டெலிகாம் உள்பட ஐந்து முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி சேவையை தொடங்கிவிட்டதாகவும், இதற்கான கட்டணமாக இந்திய மதிப்பில் மாதம் ரூ.1,289 முதல் ரூ.6,030 வரை நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 
 
5ஜி சேவை அறிவிக்கப்பட்டவுடன் சீனாவில் இந்த சேவையை பெற 10 மில்லியன் பேர் பதிவு செய்திருப்பதாகவும் அடுத்த மாதத்துக்குள் இந்த எண்ணிக்கை 150 முதல் 170 மில்லியனாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில், சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் 6ஜி சேவைக்கான ஆரம்ப பணிகளை கவனிக்க இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 

 அதேபோல செப்டம்பர் மாதத்தில் ஹூவாய் நிறுவனம் 6ஜி சேவைக்கான பணிகளை ஆரம்பித்துள்ளதாக அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .