2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வறிய குடும்பங்களுக்கு சீமெந்து மூட்டைகள் வழங்கி வைப்பு

Princiya Dixci   / 2015 நவம்பர் 24 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

நாடு முழுவதிலுமுள்ள வறிய குடும்பங்களின் வீட்டு நிர்மாண வேலைகளை நிறைவு செய்துகொள்ளும் நோக்கில், தலா 10 சீமெந்து மூடைகள் வழங்கும் வேலைத்திட்டம் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

சீமெந்து வழங்கும் இத்திட்டத்தின் கீழ், தரைக்கு சீமெந்து போடப்படாத மற்றும் சுவர் பூசப்படாத வீடுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 

இதனடிப்படையில் புத்தளம் மாவட்டத்திலுள்ள 05 தேர்தல் தொகுதிகளிலிருந்தும் சுமார் 1,000 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு தலா 10 சீமெந்து மூட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றது.

முதலாம் கட்டமாக புத்தளம் தொகுதியில் தெரிவு செய்யப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு சீமெந்து மூட்டைகள் மற்றும் தலா இரண்டு தென்னங்கன்றுகள் வழங்கு நிகழ்வு, புத்தளம் நுஹ்மான வரவேற்பு மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை (23) காலை இடம்பெற்றது. 

இந்நிகழ்வின் போது புத்தளத்தைச் சேர்ந்த 45 குடும்பங்களுக்கும் கல்பிட்டி பகுதியைச் சேர்ந்த 05 குடும்பங்களுக்குமாக மொத்தம் 50 குடும்பங்களுக்கு 500 சீமெந்து மூட்டைகள் வழங்கி வைக்கப்பட்டன. 

புத்தளம் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் எம்.என்.எம். நஸ்மி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் எஸ்.ஆர்.எம். அர்சத், வீடமைப்பு அதிகார சபையின் புத்தளத்துக்குப் பொறுப்பான பணிப்பாளர் உட்பட அதிகாரிகளும் கலந்துகொண்டனர். 

புத்தளம் தொகுதியில் மொத்தமாக 200 குடும்பங்களுக்கு இவ்வாறு சீமெந்து மூட்டைகள் வழங்கப்படவுள்ளதாகவும், மீதமானவர்களுக்கு அடுத்தடுத்த கட்டங்களில் சீமெந்து மூட்டைகள் வழங்கப்படும் என்றும் ஐ.தே.க. அமைப்பாளர் நஸ்மி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .