2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

விஞ்ஞான ஆய்வுகூடம் திறந்து வைப்பு

Princiya Dixci   / 2016 ஜூலை 16 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

கற்பிட்டி கோட்டக்கல்வி அலுவலகத்துக்குட்பட்ட நாவற்காடு ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வுகூடம், நேற்று வெள்ளிக்கிழமை (15) திறந்து வைக்கப்பட்டது.

அதிபர் எஸ்.எம்.நியூட்டன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமேல் மாகாண கல்வி அமைச்சர் சந்தியா ராஜபக்ச, வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான என்.டி.எம்.தாஹிர் மற்றும் எஸ்.எச்.எம்.நியாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான என்.டி.எம்.தாஹிரின் வேண்டுகோளுக்கிணங்க மாகாண கல்வி அமைச்சு குறித்த விஞ்ஞான ஆய்வுகூட நிர்மானப் பணிகளுக்கு 25 இலட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .