2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சீரற்ற காலநிலையால் புத்தளத்தில் 18,522 குடும்பங்கள் பாதிப்பு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 26 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜூட் சமந்த)

கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 18,522 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 100 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில் 2500 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

தெதுருஓயா, கலாஓயா, பத்துலுஓயா, செங்கல்ஓயா போன்றன பெருக்கெடுத்தமையினால் சிலாபம், ஆரச்சிகட்டுவ, பள்ளம மற்றும் வனாதவில்லுவ போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் வெள்ளத்தில் சிக்குண்டனர். இம்மக்கள், தற்போது 3 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று அந்நிலையம் தெரிவித்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .