2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தப்பிச் சென்ற சந்தேக நபர் பணிநீக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரால் மடக்கி பிடிப்பு

Kogilavani   / 2010 நவம்பர் 11 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம். மும்தாஜ்)

பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் திடீரென  தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் பணி நீக்கம் செய்யப்பட்ட சிலாபம் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், பணி நீக்கம் வழங்கப்பட்டு 12 மணி நேரம் செல்வதற்கு முன்னரே தப்பிச் சென்ற சந்தேக நபரைத் தனியாகச் சென்று கைது செய்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

மங்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிசாரால் மூவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அதில் ஒரு சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் சில தினங்களுக்குப் பின்னர் குறித்த சந்தேக நபர் தப்பிச் சென்ற வேளை அங்கு கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தரை சிலாபம் பொலிஸ் அத்தியட்சகர் சீ.ஈ. வெதசிங்கவின் ஆலோசனையில் பேரில் சிலாபம் பிரதேச குற்றத் தடுப்புப் பிரிவுக்கான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஈ.எஸ்.தயாரத்ன பணி நீக்கம் செய்துள்ளார்.

பணிநீக்க உத்தரவு நேற்று வழங்கப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினமே குறித்த பொலிஸ் உத்திஆயாகத்தர் தனிமையாகச் சென்று பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற சந்தேக நபரை சிலாபம் காக்கப்பள்ளி எனும் பிரதேசத்தில் வைத்து கைது செய்ததாகக் கூறி சிலாபம் பொலிஸ் நிலையத்தில் அச்சந்தேக நபரை ஒப்படைத்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .