2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் புத்தளம் விஜயம்

Super User   / 2011 ஜனவரி 15 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(அப்துல்லாஹ்)

புத்தளம்  நகர  சபைக்குட்பட்ட செம்மாந்தழுவ மற்றும் சீமாவெளி  ஆகிய  கிராமங்களுக்கான  குடிநீர்  விநியோகத்தை  இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பட்ரீசியா பூட்டின் இன்று சனிக்கிழமை ஆரம்பித்து வைத்தார்.

புத்தளம்  நகர சபையின் முன்னாள் தலைவர் எம்.என்.எம். நஸ்மியின் வேண்டுகோளின்  பேரில்  இலங்கையிலுள்ள அமெரிக்க  தூதுவரினால்  40 வருடங்களுக்கு மேலாக  குடிநீர்  இன்றி  காணப்பட்ட  செம்மாந்தழுவ, சீமாவெளி  கிராம மக்களுக்காக  சுமார் 8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா செலவில் குழாய் மூலம் குடிநீர் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்த கிராம மக்களின் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்ள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, புத்தளம் நகர சபை  முன்னாள் தலைவர்  எம்.என்.எம். நஸ்மியின்  இல்லத்தில்   இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பட்ரீசியா பூட்டின் மற்றும் தூதரக அதிகாரிகளுடன்  புத்தளம் நகர அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது. இதில் முன்னால் வடமேல் மாகாண அமைச்சர்  எம்.எச்.எம். நவவியும் கலந்து கொண்டார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X