2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

புத்தளம் பாதைகளை புனரமைக்க மத அமைப்புக்களின் ஒன்றியம் நடவடிக்கை

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 16 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

புத்தளம் நகரத்தில் மக்கள் பயன்பாடுகளுக்கு பெரிதும் பொறுத்தமற்று காணப்படும் பாதைகளை புனரமைக்கும் பணிகளை புத்தளம் பௌத்த, கத்தோலிக்க, இந்து, முஸ்லிம் அமைப்புக்களின் ஒன்றியம் ஆரம்பித்துள்ளது.

புத்தளம் பிரதேச அமைப்புக்கள் மற்றும் மதத் தளங்களின் நிர்வாகம் என்பன விடுத்த வேண்டுகோளையடுத்தே இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைப்பின் தலைவர் அலிசப்ரி தெரிவித்தார்.

இவ்வாறு மேற்கொள்ளப்படும் பாதை புனரமைப்பு பணிகளுக்கு பொது மக்கள் தமது சிரமதான பங்களிப்பை வழங்கிவருவதாகவும் அவர் கூறினார். தற்போது புத்தளம் 617 பி கிழக்கு கிராம சேவகர் பிரிவின் பாதைகள் செப்பனிடப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • muhusi Thursday, 17 February 2011 10:45 AM

    புத்தளம் நகர சபை மூலம் கூட இதுபோன்ற வீதி அபிவிருத்தி பணிகளை நினைத்தவுடன் செய்ய முடியாது.அங்கு பாரிய நிதி நெருக்கடி நிலவுகிறது என்பதை புதிதாக நகர சபைக்கு வரும் உறுப்பினர்கள் நன்கு புரிந்துகொள்வர். நல்லபணிகளுக்கு சுயநலம் பாராமல் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது புத்தளத்தின்
    .அரசியல்வாதிகள் உட்பட சகலரினதும் பொறுப்பாகும்.நாம் நம்மை மாற்றிக்கொள்ளாத வரையில் அல்லாஹுவும் நம்மை மாற்றியயமைக்கப்போவதில்லை. .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .