2024 மார்ச் 28, வியாழக்கிழமை

புத்தளம் நகரசபைக்கான தேர்தல் பிரசாரம் தீவிரம்

Kogilavani   / 2011 பெப்ரவரி 23 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

புத்தளம் நகரசபை தேர்தலுக்கான தேர்தல் பிரசார நடவடிக்கைகள்   தீவிரமடைந்து வருகின்றன. வேட்பாளர்கள் வீடுவீடாகச் சென்று தமக்கு ஆதரவு திரட்டுவதுடன், குழுக்  கூட்டங்கள்  உட்பட பொதுக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

புத்தளம் மாவட்டத்தில்  2  நகர சபைக்கும்  10  பிரதேச  சபைக்கும்  தேர்தல் நடைபெறவுள்ளது.  இந்நிலையில், புத்தளம் நகர சபைக்கு  9  உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக  4 கட்சிகளும்  8  சுயேட்சை குழுக்களும் போட்டியிடுகின்றன. 

ஒரு சுயேட்சை குழுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.  

ஐ.ம.சு. முன்னணி, ஐ.தே.கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், ஜே.வீ.பீ. ஆகிய  கட்சிகளுடன்  குறிப்பாக  2   சுயேட்சை குழுக்களும்  தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதை காணக் கூடியதாக உள்ளது.   

கல்பிட்டி பிரதேச சபைக்காக  3  கட்சிகளும்  8  சுயேட்சை குழுக்களும்  போட்டியிடுகின்றன.  வேட்பு மனு  தாக்கல் செய்யப்பட்டதில்  9  சுயேட்சை குழுக்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X