2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

அரசாங்கத்தை மாற்றும் நேரம் வந்துள்ளது: ரணில்

Kogilavani   / 2011 மார்ச் 02 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்சாத் றஹ்மத்துல்லா )

தற்போது ஆட்சியிலுள்ள ஊழல் நிறைந்த அரசாங்கத்தை மாற்றும் நேரம் வந்துள்ளது. தொடர்ந்து இந்த ஆட்சி இருக்குமெனில் மீண்டும் பாரிய விலையேற்றங்களை மக்கள் சந்திக்க நேரிடும் என்று எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை செய்தார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஜக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து புத்தளம் போல்ஸ் வீதியில் செவ்வாய்கிழமை மாலை இடம் பெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மெற்கண்டவாறு கூறினார்.

அன்று ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சியினை பொறுப்பேற்று இரண்டு வருடங்களுக்குள் பாரிய அபிவிருத்தி திட்டங்களை நடை முறைப்படுத்தினார். அவரால் நடை முறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் இன்றும் மக்களால் போற்றப்படுகின்றது.

மகாவலி திட்டம், துறைமுகம் , பல்கலைக்கழகங்கள், மற்றும் திறந்த பொருளாதார கொள்கை என்பனவற்றை உதாரணமாக கூறலாம்.

ஆனால் துரதிஷ்டம் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் யுத்தம் முடிந்தும் பொருட்களுக்கான விலையினை அதிகரித்து கொண்டே செல்கின்றார். இதனை மாற்ற வேண்டும், மீண்டும் மக்கள் கஷ்டங்களை அனுபவிக்க கூடாது என்பது தான் எமது இலக்காகும்.

நாளுக்கு நாள் பொருட்களுக்கான விலை அதிகரிப்பு காணப்படுகின்றது. இது மீண்டும் நாட்டில் வறுமையை தோற்றுவிக்க இந்த அரசு அடித்தளம் இடுகின்றதா? என்றும் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பினார்.

இக்கூட்டத்தின்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலித ரங்க பண்டார, காமினி ஜயவிக்ரம பெரேரா, நிரோசன் பெரேராவும் இங்கு உரையாற்றினர்.

இதன்போது, மேல் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம்.முசம்மில் உரையாற்றுகையில்,
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன ஐக்கிய தேசியக் கட்சி செய்து கொண்ட உடன்படிக்கையினாலேயே ஐக்கிய தேசியக்கட்சியின் முஸ்லிம் பிரிவு வீழ்ச்சிக் கண்டது. இனிமேல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் எவ்வித ஒப்பந்தங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி செய்யாது என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X