2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சக பொலிஸ் உத்தியோகஸ்தரின் கணக்கிலிருந்து பணத்தை மீளப்பெற முயன்ற கான்ஸ்டபிள் கைது

Super User   / 2011 ஜூலை 14 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

சக பொலிஸ் உத்தியோகஸ்தரின் வங்கிக் கணக்கிலிருந்து திருட்டுத்தனமாக பணத்தை மீளப்பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் கருவலகஸ்வெவ  பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் மேற்படி பொலிஸ்  கான்ஸ்டபிள், புத்தளத்திலுள்ள வங்கியொன்றுக்குச் சென்று தான் பொலிஸ் உத்தியோகஸ்தர் எனக்கூறி, தனது வங்கிக் கணக்கிலிருந்து ஒன்றரை லட்சம் ரூபா பணத்தை மீளப் பெற முயற்சித்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகஸ்தரின் அடையாள அட்டையை வங்கி உத்தியோகஸ்தர்  கேட்டபோது அவர் அங்கிருந்து மெதுவாக நழுவிவிட்டார்.

எனினும், கண்காணிப்பு கமெராக்கள் மூலம், அந்நபரை அவதானித்த வங்கி அதிகாரிகள் இது குறித்து புத்தளம் பொலிஸாருக்கு அறிவித்தனர்.

பொலிஸார் நடத்திய விசாரணையின் மூலம் மேற்படி நபர் கருவலகஸ்வெவ  பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் என்பதும் ஆனால், குறித்த வங்கிக் கணக்கு அவருக்குரியதல்ல என்பதும் தெரியவந்தது.

அதையடுத்து கருவலகஸ்வெவ  பொலிஸாரினால் மேற்படி கான்ஸடபிள் கைது செய்யப்பட்டதாக கருவலகஸ்வெவ  பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இப்பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இதற்கு முன்னர் தமது வங்கிக் கணக்குகளிலிருந்து சந்தேகத்திற்கிடமான வகையில் பணம் குறைந்துள்ளதாக தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இச்சந்தேக நபர் கடந்த வாரமும் சக பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து 47,000 ரூபாவை மீளப்பெற்றமை பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இச்சந்தேக நபர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 


You May Also Like

  Comments - 0

  • irfan Friday, 15 July 2011 04:29 PM

    இப்படியானவர்களுக்கு என்ன தண்டனை ?

    Reply : 0       0

    irfan Friday, 15 July 2011 04:31 PM

    இவர்களை அல்லவா மரத்தில் கட்டி வைக்க வேண்டும்.

    Reply : 0       0

    xlntgson Sunday, 17 July 2011 09:13 PM

    விடுங்கப்பா, நண்பரது காசுதானே, வட்டியும் முதலுமாகக் கொடுத்து விடுவாராக்கும்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .