2024 மார்ச் 28, வியாழக்கிழமை

புதையல் தோண்டியவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் அபராதம்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 05 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)
    
அநுராதபுரம் ஒயாமடுவ பகுதியில் புதையல் தேடிய குற்றச்சாட்டுடன் தொடர்புடையதாக கருதப்படும் சந்தேக நபர்களில்  இராணுவ சார்ஜன் மேஜர் ஒருவர் உட்பட ஐவர் தம்மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதால் அவர்கள் ஐவருக்கும் ஒருவருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் வீதம் பதினைந்து இலட்சம் ரூபாய் தண்டத்தினை அநுராதபுரம் மேலதிக நீதவான் சந்திம எதிரிமான்ன விதித்து தீர்ப்பளித்தார்.                 

சரத் குணதிலக்க, சுரேஸ் கருணாதிலக்க, சாந்த ஜயபால, எஸ்.நிமல் (சார்ஜன் மேஜர்), வஸந்த சந்தரபால (இராணுவ சிப்பாய்), ஆகியோரே குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டம் விதிக்கப் பெற்றவர்களாவர்.

தண்டப்பணத்தை செலுத்தத்தவறும் பட்சத்தில் 12 மாதகால கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட வேண்டுமெனவும் நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டார்.
    
இவ்வழக்குடன் தொடர்புடைய ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட மூவரையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X