2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் தீ

A.P.Mathan   / 2011 நவம்பர் 29 , மு.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் இன்று அதிகாலை பாரிய தீவிபத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற இத்தீவிபத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக தீயணைப்புப் படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலிலிருந்து அனல்மின் நிலையத்திற்கு கரித்துண்டுகளை எடுத்துச்செல்லும் குழாயிலேயே மேற்படி தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்துச் சம்பவத்தினால் எவருக்கும் இதுவரை எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை எனவும், அனல்மின் நிலையத்தின் சேதவிபரங்களை தற்சமயம் கூறமுடியாதுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்திகள் அனைத்தும் தற்சமயம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் சில மணிநேரத்தில் நிலைமை வழமைக்கு திரம்பிவிடும் எனவும் இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • avathaani Tuesday, 29 November 2011 02:53 PM

    சில மாதங்களுக்குள் அனல் மின் நிலையத்தில் மற்றுமொரு விபத்தா? சேத விபரங்கள் வெளியானால் அதன் சுமையினை மக்கள் தானே தாங்கவேண்டும்.

    Reply : 0       0

    Zawmy Shifran Tuesday, 29 November 2011 11:35 PM

    இதுக்குத்தான் இத கட்டும் போதே சொன்னோம், கட்ட வேணாம் கட்ட வேனாம்டு, கேட்டாங்களா?.

    Reply : 0       0

    arasi Tuesday, 29 November 2011 11:44 PM

    அம்மாடி அப்போ மீண்டும் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும். கவனம் மக்காள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .