2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தழிழ் மொழிமூல ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்திசெய்ய நடவடிக்கை

Kogilavani   / 2012 நவம்பர் 17 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                   (எம்.என்.எம்.ஹிஜாஸ்)
புத்தளம் மாவட்டத்தில் தழிழ் மொழிமூல ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்காக பட்டதாரிகளை ஆசிரிய சேவையில் உள்வாங்க வடமேல் மாகாண சபை முதலமைச்சர் அதுல விஜயசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக புத்தளம் மாவட்ட தழிழ் மொழி மூல கல்வி பிரிவுக்கான கண்காணிப்பாளரும், வடமேல் மாகாண சபை உறுப்பினருமான என்.டி.எம்.தாஹிர் தெரிவித்தார்.

முதலமைச்சர் அதுல விஜயசிங்கவுடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையினையடுத்து இவ் இணக்கப்பாடு எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வடமேல் மாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றிய 54 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நேர்முகப்பரீட்சை நேற்று நடைப்பெற்றதாக என்.டி.எம்.தாஹிர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .