2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ரத்மல்யாய சிவில் பாதுகாப்பு தலைவருக்கு கொலை அச்சுறுத்தல் என பொலிஸில் முறைப்பாடு

Super User   / 2012 நவம்பர் 18 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தில்லையடி, ரத்மல்யாய கிராம சிவில் பாதுகாப்பு தலைவருக்கு இனந்தெரியாதோரினால்  கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தில்லையடி, ரத்மல்யாய கிராம சிவில் பாதுகாப்பு தலைவர் ஆசிரியர் தொழில் செய்து வருவதுடன் தற்போது புத்தளம், தில்லையடி அல்ஹாசிமி சிட்டி கிராமத்தில் வசித்து வருகிறார். கடந்த மாதம் அல்ஹாசிமி சிட்டி கிராமத்திலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் குழுவொன்று வீட்டில் இருந்தவர்களுக்கு மயக்க மருந்து தெளித்து விட்டு அங்கிருந்த பெறுமதியான தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளார்கள்.

இதுபற்றி புத்தளம் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகிறனர். இந்நிலையில் தங்க நகை திருடப்பட்ட வீட்டின் உரிமையாளருடன் சேர்ந்து ரத்மல்யாய கிராம சிவில் பாதுகாப்பு தலைவர் குறித்த கொள்ளைச் சம்பவத்தின் விசாரணைகளுக்காக முன்னிற்பதனையும் அதில் தலையிடுவதையும் தவிர்க்குமாறும் கோரியே இக்கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக் புத்தளம் பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தான் வீட்டில் இல்லாத சமயம் வீட்டிற்கு வந்த இருவர் தலைவரின் மனைவியிடம் துப்பாக்கியை காட்டி இதற்கு பிறகும் கணவன் குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணையில் தலையிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் அவர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X