2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபைத்தலைவருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 21 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் தலைவர் ஜகத் சமந்த பெரேரா உள்ளிட்ட நால்வரையும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தனியார் பஸ் ஊழியர்கள் மூவரை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் தலைவர் இன்று திங்கட்கிழமை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

பொலிஸார் அவரையும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மாரவில நீதவான் தம்மிக்க இலங்கசிங்க உத்தரவிட்டுள்ளார்.

சிலாபம் - கொழும்பு வீதியில் சேவையில் ஈடுபடும் அதிசொகுசு பஸ் ஒன்றின் ஊழியர்கள் மீது நேற்று தாக்குதல் நடத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த நிலையிலேயே ஆராச்சி கட்டுவ பிரதேச சபையின் தலைவர் பொலிஸில் இன்று சரணடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பிரதேச சபைத்தலைவரை தவிர ஏனைய நால்வரையும் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .