2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பள்ளி தாக்குதல் தொடர்பில் சமரசத்திற்கு இணங்க மறுத்த 34பேருக்கு விளக்கமறியல்

A.P.Mathan   / 2012 நவம்பர் 15 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(இ.அம்மார்)

குருநாகல், தெலும்புகொல்ல பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலுக்கும் புதிய ஜும்ஆப் பள்ளிவாசலுக்குமிடையே கொள்கை முரண்பாட்டினால் நிலவிய வழக்கு விசாரணையின் போது இரு தரப்பினருக்கிடையே சமசரம் ஏற்படாமையின் காரணமாக இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 34 பேரையும் எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் மஜிஸ்ரேட் நீதவான் திருமதி காவிந்தியா நாணயக்கார உத்தரவு பிறப்பித்தார்.

முரண்பட்டுக் கொண்ட இரு தரப்பினரும் குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் அப்துல் சத்தார் தலைமையில இரு தரப்பினரிடையே நடைபெற்ற சமரச முயற்சியைத் தொடர்ந்து முறைப்பாடுகளை விலக்கிக் கொள்ளவதற்காக நேற்று கொக்கெரெல்ல பொலிஸ் நிலையம் சென்றனர். அங்கு பதிவு செய்யப்பட்ட 20 முறைப்பாடுகள் மட்டும் சமரசமாகத் தீர்த்துக் கொள்ளப்பட்டன. ஏனைய நான்கு முறைப்பாடுகள் இருதரப்பினரும் நீதி மன்றத்திற்கு சமூகமளித்து சட்டரீதியாக சமரசம் செய்து கொள்ளும்படி பொலிஸ் பொறுப்பதிகாரி வேண்டிக் கொண்டார். இதில் பள்ளிதாக்குதல், மரம் வெட்டி வீழ்த்தல் பற்றி இரு முறைப்பாடுகள் மற்றும் கொலை மிரட்டல் என நான்கு வழக்குகள் சமர்ப்பிக்க முடிவுவெடுக்கப்பட்டது. இதற்கு இணங்க இரு தரப்பினரும் இன்று நீதிமன்றம் வருகை தந்திருந்தனர்.

பெரிய பள்ளிவாசல் தரப்புச் சட்டத்தரணி புதிய பள்ளிவாசலில் தொழுகையோ ஜும்ஆவோ நடத்தக் கூடாது என முன்வைத்த வாதத்தின் பிரகாரம் ஹுதாப் பள்ளி சார்பில் ஆஜரான சட்டத்தரணி முன்வைத்த வாதத்தின் படி நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

சமசரம் பிளவுபட்டதன் காரணமாக பெரிய பள்ளிவாயல் தரப்பிலிருந்து 30 பேர்களையும்  தாக்குதலுக்குள்ளான ஹுதாப் பள்ளிவாசல் தரப்பிலிருந்து 4 பேருமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0

  • rima Friday, 16 November 2012 07:02 AM

    இவர்கள் இப்படி நடக்கும் போது அடுத்த சமுகம் எப்படி எம்மீது கருணை காட்டுவார்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .