2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பொலிஸ் அதிகாரியை கொன்ற சிவில் பாதுகாப்பு படை வீரருக்கு 40 வருட சிறை

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 22 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

பொலிஸ் அதிகாரியொருவரை துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொலை செய்தமை உட்பட மூன்று குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாகக் காணப்பட்ட நபரொருவருக்கு 40 வருட கடூழிய சிறைத் தண்டனையை விதித்து வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதவான் மேனக விஜேசுந்தர தீர்ப்பளித்தார். கந்தளாய், அக்போபுர பகுதயைச் சேர்ந்த சிவில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2000ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த திகதியொன்றில் ஹபரண வீதியின் பல்பொத்த பொலிஸ் பிரிவில் பாதுகாப்புக் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரியொருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்தமை மற்றும் சிவில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு காயப்படுத்தியமை, ரீ - 56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை எடுத்துச் சென்றமை போன்ற குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்ட நிலையில் வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வந்தன.

வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்ட நிலையில் குற்றவாளியாகக் கருதப்பட்டவரின் முதலாம் மற்றும் இரண்டாம் குற்றங்களுக்கு தலா 20 வருட கடுழிய சிறைத் தண்டனை விதிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .