2024 மார்ச் 28, வியாழக்கிழமை

திருவள்ளுவர் உருவச்சிலை நாளை திறந்துவைப்பு

எம்.யூ.எம். சனூன்   / 2017 ஜூன் 14 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் இந்து தமிழ் மகா வித்தியாலயத்தில், திருவள்ளுவர் உருவச்சிலை அங்குரார்ப்பண வைபவம், நாளை வியாழக்கிழமை (15) பி.ப. 2 மணிக்கு இடம்பெறவுள்ளது. 

பாடசாலை வளாகத்தில் இடம்பெறவுள்ள இவ்விழாவுக்கு பிரதம அதிதிகளாக கல்வி இராஜாங்க அமைச்சர், வி.எஸ். இராதா கிருஷ்ணன், தமிழ் நாடு வி.ஜி.பி உலகத் தமிழ் தலைவர் செவாலியர், டொக்டர், கலைமாமணி வி.ஜீ சந்தோஷம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

பாடசாலை அதிபர் திருமதி எம்.ஜே பேரம்பலம் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி , விசேட விருந்தினராக திருவள்ளுவர் சிலைகளை அமைத்தல் தொடர்பான இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளர் மறவன்புலவு க. சச்சிதானந்தம் ஆகியோர் கலந்த கொள்வதுடன், சிறப்பு விருந்தினர்களாக புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளர் டபில்யூ. பீ. விஜேசிங்க, தமிழ்ப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் இஸட்.ஏ சன்ஹிர், கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.அஸ்கா ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த டொக்டர், கலைமாமணி வி.ஜீ.சந்தோஷத்தால், இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட 16 திருவள்ளுவர் சிலைகளுள், புத்தளம் மாவட்டத்துக்கு வழங்கப்பட்ட ஒரேயொரு சிலை, புத்தளம் இந்துக்  கல்லூரியில் அமைய இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X