2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வீதிகள் புனரமைப்பு

எம்.யூ.எம். சனூன்   / 2017 ஜூன் 08 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் நகரில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்பட்ட மூன்று வீதிகளைப் புனரமைப்புச் செய்வதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள், செவ்வாய்க்கிழமை (06) மாலை, குறித்த மூன்று பிரதேசங்களிலும் சம காலத்தில் நடைபெற்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் இளைஞர் அமைப்பாளர் எம்.என்.எம். நுஸ்கியின் வேண்டுகோளின் பேரில், நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவினால், புத்தளம் தொகுதியின் ஐ.தே.கவின் அமைப்பாளர் எம்.என்.எம். நஸ்மிக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து, இந்த மூன்று வீதிகளும் புணரமைப்புச் செய்யப்படவுள்ளன.

புத்தளம் நியூ செட்லிமெண்ட் வீதியின் முதலாவது ஒழுங்கை, ஜாவுசன் பள்ளி வீதி ஒழுங்கை, நாகூர் பள்ளி வீதி ஒழுங்கை ஆகியனவே, புனரமைப்புக்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன.

இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வுகளில், புத்தளம் தொகுதியின் ஐ.தே.க  அமைப்பாளர் எம்.என்.எம். நஸ்மி, ஐ.தே.கவின் புத்தளம் இளைஞர் அமைப்பாளர் எம்.என்.எம். நுஸ்கி, ஐ.தே.கவின் மூத்த உறுப்பினர்களான முஹம்மது ஜவாஹிர், எம்.எஸ்.எம். நளீம் உள்ளிட்ட பிரதேசவாசிகள் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .