2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஆடை தயாரிப்பு பயிற்சி மையம் திறப்பு

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கற்பிட்டி பிரதேசத்தில் மூன்று ஆடை உற்பத்தி பயிற்சி நிலையங்கள், நேற்று வியாழக்கிழமை வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டன. 

அ.இ.ம.கா. கற்பிட்டி பிரதேச சபை அமைப்பாளர் எஸ்.ஆப்தீன் எஹியாவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும்,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எம்.எச்.எம்.நவவி, கற்பிட்டி பிரதேச செயலாளர் ஹேரத், அ.இ.ம.கா. புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம், கற்பிட்டி வன்னிமுந்தல் அமைப்பாளர் ஏ.ஆர்.எம்.முஸம்மில் உட்பட பிரதேச அமைப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சருமான ரிசாட் பதியுதீன், கட்சியின் புத்தளம் மாவட்ட பிரதான அமைப்பாளர் அலி சப்ரி ரஹீமுக்கு வழங்கிய 10 ஆடை உற்பத்தி பயிற்சி நிலையங்களில் மூன்று நிலையங்கள் கற்பிட்டி பிரதேசத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, கற்பிட்டி பெரியகுடியிருப்பு, மண்டலகுடா மற்றும் கப்பலடி ஆகிய பகுதியில் அமைக்கப்பட்ட குறித்த மூன்று நிலையங்களும் திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X