2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நிலக்கரி சாம்பலை வெளியேற்ற நடவடிக்கை

Kogilavani   / 2017 நவம்பர் 16 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் அனல் மின்னுற்பத்தி நிலையத்தில் உற்பத்தியாகும் நிலக்கரிச் சாம்பலை வெளியேற்றுவதற்கான அனுமதியை, நிறுவனமொன்றுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.   

இது தொடர்பில், மின்சக்தி மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டியவால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
புத்தளம் அனல் மின்னுற்பத்தி நிலையத்தில் உற்பத்தியாகும் நிலக்கரி சாம்பல்களுக்கு, அதிக கேள்வி நிலவுகின்றது.   

அதனால், அம்மின்னுற்பத்தி நிலையத்தில் சேமிக்கப்படும் சாம்பலை வெளியேற்றுவதற்காக, டெண்டர் அடிப்படையில் கேள்வி மனுக்கள் கோரப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ள கேள்வி மனுக்களில் பொருத்தமான நிறுவனம் ஒன்றுக்கு அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபாரிசின் பெயரில் மற்றும் கொள்முதல் மேன்முறையீட்டு சபையின் சிபாரிசின் பெயரில், குறித்த சாம்பலை வெளியேற்றுவதற்கான அவகாசத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, அமைச்சரவையில்  யோசனைகளை முன்வைத்தார். இதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .