2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பிரதேச அபிவிருத்தியும் நாட்டின் அபிவிருத்தியுமே அரசியலின் நோக்கம்

முஹம்மது முஸப்பிர்   / 2017 நவம்பர் 05 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாம் அரசியல் செய்யும் போது எமது ஒரே நோக்கம் எமது பிரதேசத்தின் அபிவிருத்தியும், நாட்டின் அபிவிருத்தியுமேயாக இருக்க வேண்டும். எமது பிரதேசம் முன்னேற வேண்டும். என்னிடம் இனவாதம், மதவாதம், பிரதேச வாதம் எதுவுமில்லை. அப்படி என்னிடமிருந்திருந்தால் இதுவரை நடந்த தேர்தல்களில் புத்தளம் மாவட்டத்தில் நான் முதலிடத்தில் வெற்றி பெற்றிருக்க மாட்டேன் என நீர்ப்பாசன மற்றும் நீர் வள முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

புத்தளம் தெற்கு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலைக்கு மடிக்கணினி மற்றும் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு, அதிபர் என். எம். எம். நஜீப் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,
எல்லா இன மக்களும் எனக்கு வாக்களித்தே நான் முதலிடத்தில் வெற்றி பெற்று வருகின்றேன். நாம் அனைவரும் முதலில் மனிதர்கள். நாம் இலங்கையர்கள் என்ற என்ற எண்ணத்தை எம்முள் வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது எமக்குள் எந்தப் பிரச்சினையும் இருக்கப் போவதில்லை.
இன்று எல்லா இனத்திலும் இனவாதிகள் இருக்கின்றார்கள். சிங்கள மக்களிடையேயும் இனவாதிகள் உள்ளார்கள். தமிழ் மக்களிடையேயும் இனவாதிகள் உள்ளார்கள். முஸ்லிம் மக்களிடையேயும் இனவாதிகள் இருக்கின்றார்கள். ஆனால் எம்மிடம் இனவாதம், மதவாதம் இல்லை. நான் அனைவரையும் ஒரே இனமாகவே நோக்குகின்றேன்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .