2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பொலன்னறுவையில் தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக வைத்தியசாலை

Editorial   / 2017 டிசெம்பர் 03 , பி.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவையில் தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக வைத்தியசாலை அமைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பொலன்னறுவை தேசிய வைத்தியசாலைக்கு அருகில் உள்ள காணியொன்றில் சீனாவின் நிதியுதவியுடன் இந்த வைத்தியசாலை அமைக்கப்படவுள்ளது.

சீன தூதரக அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோருக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த வைத்தியசாலை அமைப்பதற்கான இணக்கம் ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய 12 பில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டு அதிநவீன வசதிகள் கொண்ட வைத்தியசாலை அமைக்கப்படவுள்ளது.
இதேவேளை, பொலன்னறுவை மாவட்டத்தில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அது குறித்து ஆராய்வதற்கு சீன அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பொலன்னறுவை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரிசோதனைக்காக நீர் பெற்றுக்கொள்ளப்பட்டு அது தொடர்பில் ஆய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X