2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அல்ட்ராடெக் சீமெந்தின் ஆய்வுகூடத்துக்கு ISO தரச்சான்று

Editorial   / 2017 ஜூலை 19 , மு.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச சான்றளிக்கப்பட்ட பரிசோதனை ஆய்வு கூடத்தை பேணியிருந்தமைக்காக அல்ட்ராடெக் சீமெந்து லங்கா நிறுவனத்துக்கு SLAB இனால் ISO தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச தரச்சான்றளிப்பு தினம் 2017 ஐ முன்னிட்டு இந்தச் தரச்சான்று வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நவீன வசதிகள் படைத்த, சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்வு கூடத்தை சீமெந்து பரிசோதனைக்காக கொண்டுள்ள இலங்கையின் ஒரே மொத்த சீமெந்து உற்பத்தி டேர்மினலாக அல்ட்ராடெக் சீமெந்து லங்கா காணப்படுகிறது.  

சீமெந்து இறக்குமதியாளருக்கு ISO/IEC 17025:2005 தரச்சான்று வழங்கப்பட்டுள்ளதுடன், இரசாயன மற்றும் எந்திரவியல் பரிசோதனை களத்தில் காணப்படும் சான்றளிக்கப்பட்ட பரிசோதனை ஆய்வுகூடமாகவும் சர்வதேச தரச்சான்றளிப்பு தினம் 2017 இன் போது தெரிவு செய்யப்பட்டிருந்தது. சீமெந்து வகைகளில் (சாதாராண போர்ட்லன்ட் சீமெந்து மற்றும் போர்ட்லன்ட் போஸலோன சீமெந்து) மற்றும் கொங்கிறீற் ஆகியவற்றில் இரசாயன மற்றும் எந்திரவியல் பரிசோதனைகள் தொடர்பான கவனிப்பை ஊக்குவிக்கும் வகையில் இந்த சான்று அமைந்துள்ளது. “ilac-MRA” இலச்சினையின் கீழ் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் பரிசோதனை அறிக்கைகளை தற்போது உத்தியோகபூர்வமாக அல்ட்ராடெக் சீமெந்து லங்காவினால் வழங்கக்கூடியதாக இருக்கும்.

அல்ட்ராடெக் சீமெந்து லங்கா (பிரைவட்) லிமிட்டெட்டின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கிரன் ரெட்கார் கருத்துத் தெரிவிக்கையில், “சீமெந்து துறையில் கடுமையான தரப்பரிசோதனைகள் மற்றும் ஆய்வுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டு, இலங்கையில் சீமெந்தின் தரம் மற்றும் நிர்மாணத்துறையை மேம்படுத்துவதன் மீதான எமது அர்ப்பணிப்பை நாம் புதுப்பித்துள்ளோம். இந்த சான்றுகளினூடாக, நாம் தரத்தையும் பக்கசார்பற்ற அறிக்கைகளையும் அல்ட்ராடெக் சீமெந்து லங்காவின் சீமெந்து மற்றும் கொங்கிறீற் பரிசோதனை ஆய்வுகூடங்களினூடாக பெற்றுக்கொடுக்க முடியும்”  என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X