2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கொமர்ஷல் வங்கி பே மாஸ்டர் மூன்று நாட்களில் சாதனை

Editorial   / 2017 மே 22 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

2017 ஏப்ரல் மாதத்தில் 2,500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கொமர்ஷல் வங்கியின் பே மாஸ்டர் முறை ஊடாக மூன்றே தினங்களில் 11.6 பில்லியன் ரூபாயை சம்பளமாகவும் ஏனைய கொடுப்பனவுகளாகவும் செலுத்தி சாதனை படைத்துள்ளன. இது கொமர்ஷல் வங்கியின் அதி நவீன பாரிய அளவிலான கொடுப்பனவு முறையாகும்.

ஏப்ரல் 5, 6 மற்றும் 7 திகதிகளில் பே மாஸ்டர் ஊடாக மேற்படி நிறுவனங்களுக்குத் தேவையான 375,666 இலத்திரனியல் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 53 வீதமானவர்கள் கொமர்ஷல் வங்கியில் கணக்குகளைக் கொண்டுள்ள வாடிக்கையளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது என்றும் ஏனையவர்கள் ஏனைய வங்கிகளில் கணக்குகளைக் கொண்டவர்கள் என்றும் வங்கி அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட இந்த நாட்களில் ஆறாம், ஏழாம் திகதிகளில் மட்டும் பே மாஸ்டர் ஊடாக மூன்று லட்சம் பேருக்கு 9 பில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இது இந்த முறைமையின் அளப்பரிய ஆற்றலை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் வங்கி அறிவித்துள்ளது.

தனி நபர்களும் நிறுவனங்களும் கொமர்ஷல்; வங்கியின் இணைய மேடையில் ஒரு கோவையை பதிவேற்றம் செய்வதன் மூலம் பல்வேறு தரப்பினருக்கு சகல விதமான கொடுப்பனவுகளையும் செய்து கொள்ள இந்த பே மாஸ்டர் முறை வழியமைக்கின்றது. கொடுப்பனவுகளின் எண்ணிக்கைக்கு இங்கே வரையறை கிடையாது. கொடுப்பனவை செலுத்துபவர்களும் அதை பெறுகின்றவர்களும் கொமர்ஷல் வங்கியில் கணக்குகளைக் கொண்டிருந்தால் பணப்பரிமாற்றம் உடனடியாகவே இடம்பெறும்.

பல நிறுவனங்கள் தமது ஊழியர்களின் சம்பளக் கொடுப்பனவு, வாடிக்கையாளர்களுக்கான தரகு கொடுப்பனவு உட்பட இன்னும் பல கொடுப்பனவுகள் என்பனவற்றைச் செலுத்த பெரும்பாலும் இந்த முறையைப் பயன்படுத்துகின்றன. 2016ல் இந்த முறை தரவேற்றம் செய்யப்பட்டது. பாரிய அளவிலான கொடுப்பனவுகளுக்காக இரட்டை மற்றும் பன்முக அங்கீகாரங்கள் இதன் மூலம் வழங்கப்பட்டுள்ளன. குழு கணக்குகளுக்காக பிரத்தியேகமான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

வட்டிகள், பங்கிலாப கொடுப்பனவுகள், முகவராண்மை தரகுகள், காப்புறுதி கொடுப்பனவுகள், பாரிய பாவனை கொடுப்பனவுகள், ஊழியர் நம்பிக்கை நிதியம், ஊழியர் சேமலாப நிதியம் என அரச கொடுப்பனவுகள் உட்பட இன்னும் பல கொடுப்பனவுகளுக்கு நவீன தரமுயர்த்தப்பட்ட முறைமை வழிவகுக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X