2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

சக்திமிக்க தொழில் முயற்சியாளர்கள் உருவாக்கம்

Gavitha   / 2016 மே 30 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எந்தவொரு பொருளாதார அபிவிருத்தியிலும் சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்கள் பிரதான பங்கு வகிக்கின்றன. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கல், புதிய வியாபார நடைமுறைகள் மற்றும் உற்பத்தி அறிமுகம் போன்றவற்றுக்கு மட்டுமன்றி, வறுமை போன்றவற்றை குறைப்பதிலும் பாரிய பங்காற்றி வருவதே இதற்கு பிரதான காரணமாகும்.

இந்நாட்டிலுள்ள வர்த்தகங்களில் 80மூக்கும் மேற்பட்டவை சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரங்களாக உள்ளதுடன், மொத்த தேசிய உற்பத்தியில் 50மூக்கும் மேற்பட்ட பங்களிப்பை வழங்கி வருகிறது. இதற்கமைய, சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்களை மேம்படுத்துவது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார அபிவிருத்திக்கும் பாரிய பங்களிப்பை வழங்குவதாக அமைகின்றன.

இருப்பினும், சாதாரண வியாபாரிகள் முகம் கொடுக்கும் சவால்களை காட்டிலும் வேறுபட்ட பல சவால்களுக்கு இந்த வியாபாரிகள் முகங்கொடுத்து வருகின்றனர். வியாபாரத்தை ஆரம்பிப்பதற்கான மூலதனத்தை பெறல், அதிகரித்த கடன் வட்டி விகிதம் மற்றும் நிதி மேலாண்மை போன்றன அவர்களால் எதிர்கொள்ளப்படும் ஒருசில சவால்களாகும். இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை வழங்கி இந்த வியாபார சமூகத்தினரை பாதுகாக்கும் வகையிலும், பெரும்பாலானவர்களை இத்துறையுடன் இணைத்துக்கொள்ளும் முகமாகவும் இதுவரை ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்திருந்தது. கடந்த எட்டு தசாப்தங்களாக இத்தேவையை பூர்த்தி செய்து இந்நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களின் முன்னேற்றத்துக்கு தொடர்ந்து ஆதரவை வழங்கி வரும் நிதி பங்காளாராக இலங்கை வங்கி நன்மதிப்பை பெற்றுக்கொண்டுள்ளது.

நாடுமுழுவதும் பரந்துபட்ட 620க்கு மேற்பட்ட கிளை வலையமைப்பை இலங்கை வங்கி கொண்டுள்ளதுடன், சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்களுக்கான நிதி திட்டங்களை வழங்கி வருகிறது. தேசிய தொழிற்துறையில் 80மூ க்கும் மேற்பட்டவை கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அமையப்பெற்றுள்ளதுடன், இந்த நிலைமையை மாற்றியமைத்து வேலைவாய்ப்பு, உட்கட்டுமான அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதனூடாக கிராமங்களை இந்நாட்டு பொருளாதாரத்தின் கேந்திர நிலையமாக உருவாக்கும் நோக்கில் இலங்கை வங்கி 'கிராமத்துக்கு கடன்' எனும் திட்டத்தை செயற்படுத்தி வருகிறது.

இந்நாட்டு விவசாயத்துறையில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்காக 'கொவி சக்தி' மற்றும் 'கப்றுக' போன்ற விசேட கடன் திட்டங்களை அறிமுகம் செய்த இலங்கை வங்கி, வர்த்தக ரீதியான பால் உற்பத்திக்கான அபிவிருத்தி கடன் திட்டம் ஊடாக நாட்டில் பால் சம்பந்தப்பட்ட உற்பத்திகளில் ஈடுபட்டு வருபவர்களை ஊக்குவிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கு மேலதிகமாக, மீன்பிடி, தேயிலை மற்றும் இறப்பர் போன்ற துறைகளுக்கும் நிதி நிறுவனங்களின் கவனத்தை அதிகம் பெறாத அழகுகலை, ஹோட்டல் மற்றும் பேக்கரி, வீட்டு உபயோகப்பொருட்கள் போன்றவற்றிக்கும் குறைந்த வட்டி அடிப்படையிலான விசேட கடன் வசதிகளை இலங்கை வங்கி வழங்கி வருகிறது.

2010 ஆம் ஆண்டில் ரூ. 2697 மில்லியனாக இருந்த சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கடன்தொகை 2015ஆம் ஆண்டில் 14,305 மில்லியன் ரூபாயாக பதிவானதுடன், அதேயாண்டில் இத்துறையில் கடன் பெறுமதி 11.0மூ மாக அதிகரித்திருந்தமை விசேட அம்சமாகும். இதனூடாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறைகளை அபிவிருத்தி செய்து அவர்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவதில் அக்கறை செலுத்தி வரும் இலங்கை வங்கியின் அர்ப்பணிப்பு நிரூபணமாகின்றது.

இந்நாட்டு வங்கித்துறையின் முன்னோடியான இலங்கை வங்கி கடன்களை வழங்குகையில் சொத்துக்களுக்கான பாதுகாப்பை உறதி செய்வதோடு, குறித்த திட்டத்தின் மூலதன உறுதி, தொழில்நுட்ப செயற்திறன் மற்றும் சந்தை நிலைமை குறித்தும் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வியாபாரங்களில் நிலவும் கணக்கியல், சந்தைப்படுத்தல், தொழில்நுட்ப பிரச்சனைகளுக்கு சரியான தீர்வை வழங்கி வர்த்தகங்களை தொடர்ந்து முன்னோக்கி நகர்த்தி செல்வதற்கான ஆதரவை வழங்கி வருகிறது.

நெகிழ்ச்சிமிக்க மாதாந்த தவணைக்கட்டணம், தவணைக்கட்டணத்துக்கான மாற்று வழிகளை அறிமுகம் செய்தல், கடன் தவணையை மீள அட்டவணைப்படுத்தல் மற்றும் சகாயமான கடன் செலுத்தல் முறை போன்றவற்றின் ஊடாக முயற்சியாளர்களின் கனவை இலங்கை வங்கி நனவாக்கி வருகிறது. எந்தவொரு வியாபாரத்துக்கும் கடன் வழங்க முன்பு அந்த வியாபாரத்தினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் குறித்து இலங்கை வங்கி விசேட கவனம் செலுத்தி வருகிறது.

இலங்கை வங்கியின் சேவை ஊடாக பயனடைந்தோர் எண்ணிலடங்காதோர். அத்தகையவர்களுள் ஒருவரான அலங்கார மீன் ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வரும் விஜயரத்ன ரங்கஜீவ எம்மோடு இவ்வாறு தமது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். 'கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் அலங்கார மீன்களை ஏற்றுமதி செய்ய என இந்த வியாபாரத்தை ஆரம்பித்தேன். அந்த சமயத்தில் அதற்கான மூலதனத்தை கொண்டிருக்காமை பாரிய பிரச்சினையாக இருந்தது. எனது மூலதன கோரிக்கையை ஏற்று இலங்கை வங்கி அதற்கான முழு ஆதரவையும் வழங்கியது. இன்று அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் மாதாந்தம் 600 - 800 வரையான அலங்கார மீன் பெட்டிகளை ஏற்றுமதி செய்து வருகிறேன். எனது வியாபாரத்தின் மூலமாக 5,000 குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.'

'மேலும் என்னிடம் 6 வாகனங்கள் தற்போது உள்ளதுடன், அவை இலங்கை வங்கியிடமிருந்து குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொண்டவையாகும். இலங்கை வங்கியின் உயர் மட்ட நிர்வாகத்திலிருந்து தொடங்கி கிளை முகாமையாளர் வரையான அனைவரும் ஒரே குழு என்ற ரீதியில் எம்மோடு கலந்துரையாடி சேவைகளை வழங்குவதே இங்கு சிறப்பம்சமாகும்' என மேலும் அவர் தெரிவித்தார்.

'ஒவ்வொரு பிரதேசத்திலுமுள்ள முயற்சியாளர்களின் இயல்பு மற்றும் அவர்களின் தேவைகளை கண்டறிந்த பின் பயிற்சி செயலமர்வுகளுக்கான தகுதியுடைய வியாபாரிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். தற்போது வசதி கொண்ட வியாபாரிகளுக்கும் வியாபார உலகில் கால்தடம் பதிக்க எதிர்பார்த்துள்ளோருக்கும் இந்தத் திட்டத்தில் பங்குகொள்வதற்கான வாய்ப்பை இலங்கை வங்கி வழங்கி வருகிறது. இந்த ஒருநாள் செயலமர்வு மூலமாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரிகள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள், வெற்றிகரமான வியாபாரியாகுவதற்கான வழிமுறை, வெற்றிகரமான வியாபாரத்தின் இரகசியம், வங்கி மற்றும் வியாபாரங்களுக்கிடையேயான இடைவெளியை குறைத்தல் மற்றும் நிலையான வர்த்தகம் போன்ற பல தலைப்புகளின் கீழ் கலந்துரையாடப்படுகின்றன. சந்தைப்படுத்தல், தொழிலாளர் சட்டத்திட்டங்கள், வரி நியதிகள் மற்றும் சுற்றுச்சூழல் பசுமை போன்ற பிரிவுகள் குறித்தும் கலந்துரையாடப்படுகின்றன. 2011 இலிருந்து 2016 வரையில் முன்னெடுக்கப்பட்ட இந்த திட்டம் ஊடாக 3,500 வரையான சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகள் பயனடைந்துள்ளனர்' என இலங்கை வங்கியின் கிளை வங்கி நடவடிக்கைகளுக்கான பிரதி முகாமையாளர் சந்திராணி ஜயரத்ன தெரிவித்தார்.

இதேவேளை எம்ராய்டரி அலங்கார நிறுவனத்தின் உரிமையாளரான ஜஸ்டின் பெரேரா கருத்து தெரிவிக்கையில், 'ஏiஉவழசயை ளுநஉசநவ போன்ற சர்வதேச வர்த்தக நாமங்களுக்கான மூலப்பொருட்களை வழங்கி வரும் இவரது நிறுவனம் நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய பங்களிப்பை வழங்குகிறது. ஆரம்பத்தில் 80,000 அமெரிக்க டொலராகவிருந்த உற்பத்தி பெறுமதி தற்போது மாதாந்தம் 500,000 அமெரிக்க டொலர் பெறுமதியாக வளர்ச்சி கண்டுள்ளது.

இந்நாட்டில் சம்பிரதாய உணவு மற்றும் மீன் டின்கள் ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளரான நிமல் ஜயசூரிய கருத்து தெரிவிக்கையில், 'இலங்கையில் உடனடி ஆகாரமாக உட்கொள்ளக்கூடிய உணவுகளை டின்கள் மற்றும போத்தல்களில் அடைத்தல், எயஉரரஅ pயஉமiபெ போன்ற செயற்பாடுகளை உள்ளடக்கியதே எனது வியாபாரம். இந்த முறையில் தற்போது நாம் 14 வகையான உடனடி உணவு வகைகளை ஏற்றுமதி செய்து வருகிறோம். ஆண்டுக்கான தொழில் முயற்சியாளர் விருதையும் ஆறு தடவைகளுக்கும் மேலாக தேசிய ஏற்றுமதி விருதுகள் விழாவில் விருதுகளையும் இவரது நிறுவனம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

'கடந்த 1989ஆம் ஆண்டு இந்த வியாபாரத்துக்காக கடன் பெறுவதற்காக இலங்கை வங்கியின் பேருவல கிளைக்கு நான் சென்றிருந்;தேன். அப்போது இலங்கை வங்கியினால் அதுவரை வழங்கப்பட்டிராத அதிகூடிய கடன் தொகையை எனக்கு வழங்கியதுடன், இன்று எனது மாபெரும் வளர்ச்சியின் அடித்தளமாக இலங்கை வங்கி திகழ்கிறது' என்றார்.

தேசிய பொருளாதாரத்தின் அடித்தளமான சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரிகளை மேலும் ஊக்குவித்து நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் பிரதான பங்களிப்பை வழங்கிவரும் தேசத்தின் வங்கியாளரான இலங்கை வங்கி அதன் பங்களிப்பை தொடர்ந்து வழங்கும் என்பது திண்ணமாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .