2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சிறுவர்களின் கனவை நனவாக்கும் அஸ்ட்ரா

Gavitha   / 2016 டிசெம்பர் 13 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுவர்களின் கனவுகள் தூய்மையானவை, தன்னலமற்றவை மற்றும் புத்தாக்கமானவை. இந்தக் கனவுகளை ஊக்குவிக்கும் வகையில், இலங்கையின் சிறுவர்களை தமது கனவுகளை வர்ணம் தீட்டி வெளிப்படுத்த வருமாறு அஸ்ட்ரா அழைப்பு விடுத்திருந்தது. “டப்பில் வரையச் சொல்லுங்கள்” (Paint your Own Tub) எனும் தலைப்பில் அஸ்ட்ரா டப்களுக்கு வர்ணம் தீட்டும் நடவடிக்கையாக இது அமைந்திருந்தது.

இவ்வாறு வர்ணம் தீட்டியிருந்த சிறுவர்களிலிருந்து 50 வெற்றியாளர்களை இறுதிப்போட்டியில் அஸ்ட்ரா தெரிவு செய்திருந்தது. ​ெகாழும்பில் ந​ைட​ெபற்ற இந்நிகழ்வின் ​போது, சிறுவர்களின் களங்கமற்ற கனவுகளை பாதுகாப்பதன் முக்கியத்துவம் எனும் தலைப்பில் குழுநிலை சந்திப்பொன்றும் இடம்பெற்றது. யுனிலீவர் ஸ்ரீ லங்காவின் பிரதான உணவுகள் பிரிவின் தலைமை அதிகாரி ஷமாரா சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “சிறுவர்கள் வித்தியாசமான கனவுகளை காண்பார்கள். கடந்த மூன்று மாதங்களில் எமக்கு கிடைத்திருந்த வர்ண ஓவியங்களிலிருந்து இது உறுதியாகியிருந்தது. சமூகத்துக்குச் சிறந்த நன்மை கிடைப்பது பற்றி அவர்கள் கனவு காண்கின்றனர். நாட்டுக்கும், உலகுக்கும் சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு சிறுவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் ஊக்குவித்து, இந்த கனவுகளின் பின்னால் காணப்படும் புத்தாக்கங்களின் முக்கியத்துவத்தை உணர வைக்க வேண்டும் என்பதில் அஸ்ட்ரா நம்பிக்கை கொண்டுள்ளது” என்றார்.  

தமது தங்க விழாவை கொண்டாடும் அஸ்ட்ரா, அவர்களின் கனவுகளையும் தூய சிந்தனைகளையும் ஊக்குவித்து அதனூடாக சிறந்த உலகையும் எதிர்காலத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை அறிந்துள்ளது. 

மூன்று மாத காலப்பகுதியினுள், யுனிலீவர் மூலமாக 10,000 விண்ணப்பங்கள் கிடைத்திருந்தன. நாடு முழுவதிலும் காணப்படும் அஸ்ட்ரா டிரீம் ஸ்ரூடியோக்கள் மூலமாக 7,000 விண்ணப்பங்கள் சேகரிக்கப்பட்டிருந்தன. விண்ணப்பதாரிகள் அழைக்கப்பட்டு, அஸ்ட்ரா டப்களில் அவர்களின் கனவுகளை வர்ணம் தீட்டி வெளிப்படுத்துமாறு கோரப்பட்டிருந்ததுடன், பின்னர் அவர்களின் கனவு என்ன என்பதையும் அதை எவ்வாறு எய்த திட்டமிட்டுள்ளனர் என்பதையும் குறிப்பிட்டு கடிதமொன்றையும் அனுப்புமாறு கோரியிருந்தனர். 

மாகாண வருமான திணைக்களத்தின் உதவியுடன் 50 வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் விரிவுரையாளர் குழுவினால் மிகவும் சிறந்த கனவு வெளிப்பாடு தெரிவு செய்யப்பட்டிருந்தது. 

50 போட்டியாளர்களுக்கும் 200,000 பெறுமதியான பணப்பரிசுகள் வழங்கப்பட்டிருந்தன. வெற்றியாளர் காவியா பிரபோதினி 300,000 ரூபாயை பெற்றுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .