2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

போர்ட் சிட்டி ஆரம்பம்

Gavitha   / 2016 மார்ச் 14 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு போர்ட் சிட்டி நிர்மாணப்பணிகள் இம்மாதம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொள்கை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தகச் செயற்பாடுகளுக்கான அமைச்சர் மலிக் சமரவிக்ரம இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வியாபார சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, அமைச்சர் இந்தக் கருத்தை குறிப்பிட்டார்.

சூழல்சார் அறிக்கை தமக்கு தற்போது கிடைத்துள்ளதாகவும், இதில் போர்ட் சிட்டி திட்டம் பற்றிய சில பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து இந்தத் திட்டத்தின் நிர்மாணப்பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

99 வருட காலத்துக்கான குத்தகை என்பது தொடர்ந்து பேணப்படும் என்பதுடன், நிலத்தை நிரப்பும் செயற்பாடுகள் பூர்த்தியடைந்த பின்னர், இந்தச் செயற்திட்டம் இலங்கை - சீன அரசாங்கங்களின் இணை திட்டமாக முன்னெடுக்கப்படும் என மேலும் கூறினார்.

அத்துடன், ஹம்பாந்தோட்டையில் 1000 ஏக்கரில் விசேட முதலீட்டு மற்றும் தொழிற்பேட்டை ஒன்றை அமைக்கவும் சீனா ஆர்வத்துடன் செயலாற்றுவதாகவும் அமைச்சர் சொன்னார். இந்தத் திட்டங்களும் இலங்கை அரசாங்கம் - சீன அரசாங்கம் இடையிலான ஒன்றிணைந்த மேற்பார்வையின் கீழ் இயங்கும் என குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .