2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முதல் அரையாண்டில் Huawei சிறந்த பெறுபேறுகள்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

2016ஆம் ஆண்டு முதல் அரையாண்டின் விற்பனை வருமானம், அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 41% இனால் அதிகரித்து, 77.4 பில்லியன் சீன யுவான் தொகையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக Huawei அறிவித்துள்ளது. ஏற்றுமதி செய்யப்பட்ட திறன்பேசிகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 25% அதிகரிப்புடன் 60.56 மில்லியனை எட்டியுள்ளது.

IDC இன் புள்ளிவிவரங்களின் பிரகாரம், 2016 ஆம் ஆண்டு முதல் அரையாண்டுப் பகுதியில் சர்வதேச ரீதியாக ஏற்றுமதி செய்யப்பட்ட திறன்பேசிகளின் எண்ணிக்கை வெறும் 3.1% இனால் வளர்ச்சி கண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், Huawei அடையப்பெற்றுள்ள வளர்ச்சியானது தொழிற்துறையில் மிகவும் சிறப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.  

Huawei நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான றிச்சர்ட் யு கூறுகையில், 'ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா, மத்திய ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா அடங்கலான வளர்ச்சியடைந்துவருகின்ற சந்தைகளில், குறிப்பாக பாரம்பரியமான, உயர் தொழில்நுட்பம் கொண்ட திறன்பேசி சந்தைகள் விரைவாக வளர்ச்சியடைந்து வருவதை நாம் கண்டுள்ளோம்.'

'மிகவுயர்ந்த மட்டத்தில் போட்டித்திறன் காணப்படுகின்ற திறன்பேசிச் சந்தையில் காத்திரமான வளர்ச்சியை நாம் தொடர்ந்தும் பேணி வருகின்றமையானது, புத்தாக்கத்தின் மீது Huawei  கொண்டுள்ள நீண்ட கால அடிப்படையிலான அர்ப்பணிப்புடனான ஈடுபாடு, நுகர்வோரின் தேவைகளை சிறப்பாக எதிர்வுகூறல் மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் கவனம் செலுத்துகின்ற இரட்டை மூலோபாயம் ஆகியவற்றிற்கு சான்று பகர்கின்றது. எதிர்காலத்தைக் கருதுகையில், நுகர்வோருக்கு மிகச் சிறந்த மட்டத்திலான சேவையை வழங்குவதற்கு எமது தொழிற்துறைப் பங்காளர்களுடன் நாம் தொடர்ந்தும் பணியாற்றி, தொழில்நுட்பம், தரம் மற்றும் நவீன வடிவம் ஆகியவற்றை இணைக்கும் புத்தாக்கமான புதிய உற்பத்திகளை வடிவமைப்போம்'.

இலங்கையில் தற்போது இரண்டாம் இடத்திலுள்ள திறன்பேசி வர்த்தக நாமமாக ர்ரயறநi திகழ்வதுடன், அடுத்த சில காலாண்டுகளில் நாட்டில் முதல் இடத்தில் திகழுகின்ற திறன்பேசி வர்த்தகநாமமாக மாறவுள்ளது. இலங்கையில் முதலிடத்தில் திகழும் வர்த்தக நாமமான சிங்கர் ஸ்ரீ லங்கா பிஎல்சி இனால் Huawei சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .