2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

யூனியன் அஷ்யூரன்ஸ் வெற்றிக்கான பாதை நிறைவு

Gavitha   / 2016 டிசெம்பர் 28 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையர்களின் வாழ்க்கையில் வெற்றியை பெற்றுக்கொடுப்பதற்கு, வழிகாட்டலாக அமைந்திருந்த யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட வெற்றிக்கான பாதை நிகழ்ச்சித்திட்டம், அண்மையில் வெற்றிகரமாக நிறைவடைந்திருந்தது. இந்த நிகழ்ச்சித்திட்டம், ஒக்டோபர் 21ஆம் திகதி முதல் டி​ெசம்பர் 15ஆம் திகதி வரை நடைபெற்றது. 

மனிதர்களாகிய எங்களுக்கு, வாழ்க்கையில் வெவ்வேறு விதமான தேவைகள் காணப்படுகின்றன. இந்தத் தேவைகள் பெருமளவான சந்தர்ப்பங்களில், சுகாதாரம், கல்வி மற்றும் முதலீடு, பாதுகாப்பு மற்றும் ஓய்வு பெறும் வாழ்க்கை போன்ற அடிப்படை பிரிவுகளில் உள்ளடக்கிக் கொள்ள முடியும். எமது வாழ்க்கையில் வெற்றிக்கான காரணிகளாக, நாம் எந்தளவுக்குச் சிறந்த முறையில் இந்தத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறோம் என்பதை பொறுத்து இது அமைந்துள்ளது. 

எவ்வாறாயினும், தற்போது வாழ்க்கை முறைகள் மற்றும் சவால்கள் மத்தியில் இந்தத் தேவைகளை நிர்வகித்துக்கொண்டு, வாழ்க்கையை வெற்றி கொள்வதற்கு முறையான வழிகாட்டலும் தேவையாக அமைந்துள்ளது.

இந்த வழிகாட்டல்களை பெற்றுக்கொடுப்பதை நோக்காகக் கொண்டு, யூனியன் அஷ்யூரன்ஸ் வெற்றிக்கான பாதை நிகழ்ச்சித்திட்டத்தை அறிமுகம் செய்திருந்தது. இலங்கையர்கள் மத்தியில், காணப்படும் வாழ்க்கை முறையை இனங்கண்டு, மூன்று தசாப்த காலமாக, இலங்கை மக்களுக்கு சிறந்த காப்புறுதித்தீர்வுகளை வழங்கிய யூனியன் அஷ்யூரன்ஸ், இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலமாக, வெற்றியை நோக்கி பயணிப்பதற்கு முறையான பாதையை ஏற்படுத்திக்கொடுப்பதை இலக்காகக் கொண்டு செயலாற்றியிருந்தது. 

யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனம், தனது சேவைகளை, நாட்டு மக்களின் தேவைகள் பற்றிய முறையான அறிவுடன், அந்த தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான வகையில் வடிவமைத்துள்ளது. அதுபோல, காலத்துடன் மாற்றமடையும் வாழ்க்கை முறைகளுக்கு பொருத்தமான வகையில், இந்தச் சேவைகளை மேலும் மேம்படுத்தி வழங்க, யூனியன் அஷ்யூரன்ஸ் தன்னை தயார்ப்படுத்தியுள்ளது.

அதுபோலவே, காலத்துடன், மாற்றமடையும் வகையில் சேவைகளை மெருகேற்றம் செய்து வழங்கி வருகிறது. இதுவரையில், அனைவரின் வாழ்க்கையிலும் வெற்றியை அருகில் கொண்டு வருவதற்கு, பொருத்தமான திட்டங்களையும் யூனியன் அஷ்யூரன்ஸ் அறிமுகம் செய்துள்ளது. அதன் படி, கல்வித்தேவைகளுக்காக யூனியன் சுப்பர் இன்வெஸ்ட்டர் மற்றும் யூனியன் லைஃவ் அட்வான்டேஜ் போன்ற திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் பயனுள்ள முதலீட்டு வாய்ப்புகள் பற்றி கவனத்தைச் செலுத்துவோருக்காக யூனியன் சுப்பர் இன்வெஸ்ட்டர், யூனியன் சலேன்ஜர் மற்றும் யூனியன் சிங்கிள் பிரீமியம் அட்வான்டேஜ் போன்றத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .