2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

லங்கா ஹொஸ்பிடல்ஸின் 1,150ஆவது IVF குழந்தை

Editorial   / 2018 செப்டெம்பர் 03 , பி.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

லங்கா ஹொஸ்பிடல்ஸின் 1,150ஆவது IVF (இன் விட்ரோ பெர்டிலைசேஷன்) குழந்தை வெற்றிகரமாக பிரசவித்துள்ளது. லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் ‘கருவுறல் மையம்’ தெற்காசியாவின் மிகவும் அதிநவீன வசதிகளைக் கொண்ட நிலையமாக அங்கிகரிக்கப்பட்டு உள்ளதுடன், அதன் மருத்துவ மற்றும் தொழில்முறை தரநிலைகளின் காரணமாக உலகில் அபிவிருத்தியடைந்த கருவுறல் மையங்களுக்கு நிகரான வெற்றி விகிதத்தினை பெறுகின்றது.

ஆண்டு முழுவதும் செயற்படும் லங்கா ஹொஸ்பிடல்ஸ் கருவுற்றல் மையம் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டுள்ளதுடன், பெண் துணையின் மாதவிடாய் சக்கரத்தை பாதிக்காமல் அதிகளவான வெற்றிகரமான IVFகுழந்தை பிரசவங்களை பூர்த்தி செய்கின்றது.

லங்கா ஹொஸ்பிடல்ஸ் கருவுற்றல் மையம் இலங்கையின் துணை கருவுற்றல் துறையில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. அதில் Reactive Oxygen in Human Semen (ROS) மற்றும் Sperm DNA Fragmentation பகுப்பாய்வு novel investigations மூலமாக முதலாவது கருவுற்றல் உறுதிப்படுத்தல் மற்றும் ஆண் துணை ஆற்றல் அதிகரிப்பு என்பனவும் அடங்கும்.   

மேலும் லங்கா ஹொஸ்பிடல்ஸ் கருவுற்றல் மையம் PGS (Pre-implantation Genetic Screening by NGS) எனும் அதிநவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கருமுட்டையானது கருப்பைக்கு மாற்றம் செய்ய முன்னர் Aneuploidy, Down’s syndrome, Haemophilia, Thalassemia and x-linked disorders போன்ற உயிரணு குறைபாடுகளை கண்டறியலாம்.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X