2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஐந்து வாரங்களின் பின்னர் புரள்வு பெறுமதி 1 பில்லியன் ரூபாவை கடந்தது

A.P.Mathan   / 2014 மார்ச் 28 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்றைய தினம் பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்கள் நிறைவடைந்த போது, சுமார் ஐந்து வாரங்களின் பின்னர் புரள்வு பெறுமதி 1 பில்லியன் ரூபா பெறுமதியை கடந்திருந்தது. இதில் தேசிய அபிவிருத்தி வங்கியின் நான்கு மொத்த கைமாறல்கள் பங்களிப்பு வழங்கியிருந்தன. அ.ப.வி.சு மொத்தமாக 41.65 புள்ளிகளால் அதிகரித்திருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் செலான் வங்கி பங்குகள் மீது உயர்ந்த மட்ட ஈடுபாடு காணப்பட்டது. வெளிநாட்டவர்கள் நிகர கொள்வனவாளர்களாக பதிவாகியிருந்தனர்.

வங்கி, நிதியியல் மற்றும் காப்புறுதி துறை சந்தைப்புரள்வு பெறுமதியில் அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தது. இந்த துறையின் சுட்டெண் 0.45 வீத உயர்வை பதிவு செய்திருந்தது, தேசிய அபிவிருத்தி வங்கி பங்கொன்றின் விலை 1.00 ரூபாவால் (0.56%) அதிகரித்து 181.00 ரூபாவாக பதிவாகியிருந்தது. செலான் வங்கி பங்கொன்றின் விலை 0.80 ரூபாவால் (1.33%) அதிகரித்து 61.00 ரூபாவாக பதிவாகியிருந்தது.

பன்முகத்துறை சந்தைப்புரள்வு பெறுமதியில் இரண்டாவதாக அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தது. (ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பங்குகளின் பங்களிப்புடன்) இந்த துறையின் சுட்டெண் 1.16 வீத உயர்வை பதிவு செய்திருந்தது, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்கொன்றின் விலை 4.00 ரூபாவால் (1.83%) அதிகரித்து 222.00 ரூபாவாக பதிவாகியிருந்தது. எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ்  பங்கொன்றின் விலை 0.20 ரூபாவால் (2.27%) கூடி 9.00 ரூபாவாக பதிவாகியிருந்தது.

டிஸ்டிலரீஸ் கம்பனி பங்குகளும் புரள்வு பெறுமதியில் அதிகம் பங்களிப்பு செலுத்தியிருந்தது. பங்கொன்று 1.00 ரூபாவால் (0.49%j) அதிகரித்து 204.00 ரூபாவாக பதிவாகியிருந்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .