2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இலங்கை தேயிலை உற்பத்தி பெப்ரவரி மாதத்தில் 10 வீதம் சரிவு

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 01 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெப்ரவரி மாதத்தில் இலங்கையின் தேயிலை உற்பத்தி 2013ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 10 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. மார்ச் மாதத்தில் மேலும் சரிவடைந்திருக்கும் என ஜோன் கீல்ஸ் தேயிலை முகவர் நிறுவனம் அறிவித்துள்ளது.

பெருந்தோட்ட பகுதிகளில் நிலவும் வரட்சியான காலநிலை இந்த உற்பத்தி வீதத்தில் சரிவு ஏற்பட காரணமாக அமைந்திருந்ததாக குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.

உயர் நில தேயிலை உற்பத்தி 16 வீதத்தாலும், மத்திய நில தேயிலை உற்பத்தி 9 வீதத்தாலும், தாழ் நிலை தேயிலை உற்பத்தி 8 வீதத்தாலும் வீழ்ச்சியடைந்திருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு எல்நினோ காலநிலை நிலவும் வருடமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், நாட்டின் பெருமளவான பகுதிகளில் வரட்சியான காலநிலை நீண்ட காலத்துக்கு நிலவும் சூழல் காணப்படுகிறது. இதன் காரணமாக நாட்டின் பெருந்தோட்டத்துறையும் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .