2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

20 புதிய இடங்களுக்கு கொமர்ஷல் கிரெடிட்

A.P.Mathan   / 2014 மார்ச் 25 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொமர்ஷல் கிரெடிட் நிறுவனமானது சாதனையை முறியடிக்கும் விதத்தில் நாடு முழுவதிலும் உள்ள 20 புதிய இடங்களில் கிளைகளை விஸ்தரித்ததன் ஊடாக, நிதித் துறையில் மிகவும் குறிப்பிடத்தக்க வெற்றிக் கதையை நிகழ்த்திய நிறுவனமாகவும், இலங்கையில் மிக விரைவாக வளர்ச்சியடைந்து செல்லும் நிதிக் கம்பனியாகவும் தனது நன்மதிப்பை மேம்படுத்திக் கொண்டுள்ளது.

மார்ச் 20ஆம் திகதி வியாழக்கிழமை நாடு பூராகவும் ஒரே நேரத்தில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்வுகளில் கொமர்ஷல் கிரெடிட் நிறுவனத்தின் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் ஒன்றுதிரண்டிருந்த அதேவேளை, உண்மையில் கொமர்ஷல் கிரெடிட் நிறுவனத்தின் முப்பத்தி இரண்டு வருட வரலாற்றிலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மறக்க முடியாத ஒரு நாளாகவும் அது அமைந்திருந்தது.

புதிய கிளை அமைவிடங்கள் நாட்டின் நாலாபாகங்களிலும் பரவலாக அமைந்துள்ள அதேநேரம், கொமர்ஷல் கிரெடிட் வலையமைப்பில் புதிதாக இணைக்கப்படுகின்றன. அந்த அமைவிடங்களாவன – அளுத்கம, அரலகன்வில, அகுரஸ்ஸ, சுன்னாகம், தெனியாய, நெடுந்தீவு, எல்பிட்டிய, கிரிவுல்ல, ஹற்றன், கற்பிட்டி, மன்னார், மதவாச்சி, நாவலப்பிட்டி, பொத்துவில், ரிகிலகஸ்கட, தெல்தெனிய, தனமல்வில, உடுகம, வாழைச்சேனை மற்றும் வெலிமட ஆகியவையாகும்.

இந்த மாபெரும் விஸ்தரிப்பு முன்னெடுப்பின் மூலமாக கொமர்ஷல் கிரெடிட் நிறுவனம் நாடு முழுவதிலுமான தனது சேவைக்கிடைப்பனவை 75 அமைவிடங்களைக் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தியிருக்கின்றது. அதன்மூலம், நாடு பூராகவும் உறுதிமிக்க வகையில் அதிகரித்துச் செல்கின்ற வாடிக்கையாளர் தளமானது அதியுன்னத மட்டத்திலான சேவைகள் மற்றும் நிபுணத்துவம் என்பவற்றை மிக இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடிய விதத்தில் கொண்டு செல்கின்றது.

கொமர்ஷல் கிரெடிட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரொஷான் எகொடகே கூறுகையில், 'இந்த முக்கியத்துவமிக்க கிளை விஸ்தரிப்பு, அதுவும் அந்நடவடிக்கை     ஒரே நாளில் இடம்பெறுகின்றமையானது இலங்கை பொது மக்கள் தொடர்பில் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீண்டும் ஒரு தடவை வெளிப்படுத்துவதாக அமைகின்றது. அதிக வகைகளிலான உற்பத்திகள் மற்றும் சேவைகளின் மூலம் மேற்படி நகரங்களிலும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் வாழ்கின்ற மக்களுக்கு சேவையாற்றுவதற்கு நாம் இப்போது முழுமையாக தயார்நிலையில் இருக்கின்றோம். அவ்வாறு வழங்கப்படும் சேவைகளுள் - நிலையான வைப்புக்கள், குத்தகை, வாடகைக் கொள்வனவு, தங்கக் கடன்கள், றியல் எஸ்டேட், தனிநபர் கடன்கள், கல்விசார் கடன்கள் மற்றும் நுண்பாக நிதி வசதி போன்றவை உள்ளடங்குகின்றன' என்றார்.

கொமர்ஷல் கிரெடிட் நிறுவனத்தின் மிகச் சிறப்பான கடந்தகால பதிவுகளை உறுதிப்படுத்தும் விதத்தில் முதன்னிலை சந்தையில் தனியார் பங்கு முதலீட்டாளராக திகழ்கின்ற ஐக்கிய அமெரிக்காவின் சிகாகோவை தளமாகக் கொண்டியங்கும் கிரியேஷன் இன்வெஸ்ட்மென்ட்ஸ் கெப்பிட்டல் மெனேஜ்மன்ற் எல்.எல்.சி., நிறுவனமானது தனக்கு முழுமையாக சொந்தமான துணை நிறுவனமாக அமைந்துள்ளது. இதன் ஊடாக ரூபா 1.68 பில்லியனை முதலீடு செய்வதற்கு அண்மையில் உடன்பட்டுள்ளது. சர்வதேச தனியார் பங்கு நிதியம் ஒன்றினால் பகிரங்கமாக பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இலங்கையின் உரிமம்பெற்ற நிதிக் கம்பனி ஒன்றில் மேற்கொள்ளப்படுகின்ற மிகப் பெரிய அளவிலான முதலீடாக இது காணப்படுகின்றது. அதுமட்டுமன்றி, கொமர்ஷல் கிரெடிட் நிறுவனத்தின் மீதான ஒரு உறுதியான மதிப்பீடாகவும் இது அமைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட இலங்கையின் முன்னணி நிதிச் சேவை நிறுவனங்களுள் ஒன்றாக கொமர்ஷல் கிரெடிட் நிறுவனம் திகழ்கின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .