2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகத்தின் கிளைகள் விஸ்தரிப்பு

Super User   / 2010 செப்டெம்பர் 20 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையில் தகவல் தொழில்நுட்ப கற்கைகளை வழங்குவதில் முன்னணியில் திகழும் இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகம், தனது புதிய கிளைகளை யாழ்ப்பாணத்திலும், பங்களாதேஷ் நாட்டிலும் நிறுவ திட்டமிட்டுள்ளது.

இப்பிராந்தியங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அதி சிறந்த தகவல் தொழில்நுட்ப கல்வி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கிலேயே இந்த விஸ்தரிப்பு இடம்பெறவுள்ளது.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மஹிந்த சிந்தனை அபிவிருத்தி திட்டத்தின் அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப துறையும் அபிவிருத்தி கண்டு வருகிறது.

இதன் ஒரு அங்கமாக உலகளாவிய ரீதியில் இலங்கையின் கல்வித் தரத்தை மேம்படுத்தக் கூடிய ஒரு சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.

இது போன்ற விஸ்தரிப்பு மூலம் தகவல் தொழில்நுட்ப துறையில் கடந்த சில ஆண்டுகளில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
 
தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு சிறந்த தகவல் தொழில்நுட்ப கல்வியை வழங்கும் நோக்கில் இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகம் சர்வதேச ரீதியில் தமது கிளைகளை விஸ்தரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகத்தின் தலைவர் பேராசிரியர் கருணாரத்ன கருத்து தெரிவிக்கையில்,  வெகு விரைவில் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலங்கையில் தமது கல்வியை தொடர்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளோம்.

இதன் மூலம் எமது நாட்டுக்கு வெளிநாடுகளுடன் சிறந்த உறவை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்றார்.

இது தொடர்பாக, இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பேராசிரியர் லலித் கமகே கருத்துத் தெரிவிக்கையில், பங்களாதேஷ் விஸ்தாரிப்பு மிகவும் முக்கியமானதாகும்.

எமது நாட்டில் தகவல் தொழில்நுட்ப கற்கைகள் மற்றும் வியாபார கற்கைகளுக்கு சிறந்த வரவேற்பு காணப்படுகிறது. எமது நோக்கம் தெற்காசியாவிலுள்ள முதற்தர 10 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழ்வது என்றார்.

யாழ்ப்பாணத்தில் நிறுவப்படவுள்ள கிளை நகரின் மத்தியில் கேந்திரத்தில் அமையவுள்ளது. இங்கு கற்கைகளை முன்னெடுப்பதற்காக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திறமை வாய்ந்த பேராசிரியர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

அத்துடன் மாணவர்களுக்கு தமது உயர் கல்வியை பூர்த்தி செய்வதற்கு இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகத்தின் வெளிநாட்டுக் கிளை அல்லது ஏனைய முன்னணி பல்கலைக்கழகங்களை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மத்தியில் அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு உயர் கல்வியை தொடர்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது மிகவும் முக்கியமானது என்று பேராசிரியர் லலித் கமகே தெரிவித்தார்.

alt


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X