2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தேநீர் அருந்த, உலகின் சிறந்த பகுதிகளில் ஒன்றாக பொகவந்தலாவை தெரிவு

Super User   / 2010 செப்டெம்பர் 29 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தேநீர் அருந்துவதற்கு உலகின் சிறந்த 10 பகுதிகளில் ஒன்றாக பொகவந்தலாவை தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் பழமை வாய்ந்த பத்திரிகையான சிட்னி மோர்னிங் ஹெரல்ட் மேற்கொண்டிருந்த ஆய்வொன்றின் மூலமே பொகவந்தலாவை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

பொகவந்தலாவையுடன் றிட்ஸ் லண்டன்,  ட்ரான்ஸ்-சிபேரியன் ரெயில்வே ரஷ்யா, யுயெங் சீனா, ஜப்பானின் டெம்பிள் ஸ்டிறிவ்யுன் ஊஜி மாவட்டம்  மற்றும் பெரு நாட்டைச் சேர்ந்த வரலாற்றுப் புகழ்வாய்ந்த இன்கா டிரெய்ல் போன்றன இதில் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இலங்கையின் பொகவந்தலாவை தேயிலை உற்பத்தியில் 1860 ஆம் ஆண்டிலிருந்து செயற்பட்டு வருகிறது. தேயிலை தயாரிப்பின் போது விசேடமான ரகங்களிலும் வாசனையிலும் மிகவும் தூய்மையான முறையில் தயாரித்து வருகின்றது.

தேயிலை இலைகள் மிகவும் நுட்பமான முறையில் பறிக்கப்பட்டு கவனமாக பதப்படுத்தப்பட்டு உயர் தரங்களுக்கமைய தயாரிக்கப்பட்டு பின்னரே ஒருவருடைய கோப்பையை அடைகிறது.

பொகவந்தலாவை தேயிலை எஸ்டேட் நிறுவனத்தின் திட்டமிடல் மற்றும் செயற்திட்ட அமுலாக்கல் பணிப்பாளர் ஜயம்பத்தி மொல்லிகொட கருத்து தெரிவிக்கையில், "பல ஆண்டுகளாக இந்த துறையில் நாம் ஆற்றியுள்ள சேவைகளின் அடிப்படையில் வாடிக்கையாளர்களின் பிரத்தியேகத் தெரிவாக நாம் அமைந்துள்ளோம்.

எமது தேயிலைத் தோட்டங்களிலிருந்து கிடைக்கும் சிறந்த தயாரிப்புகளையும் சேவைகளையும் கொழுந்து பறிப்பது முதல் பொதி செய்வது வரை எமது வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கிறோம். எமது தேயிலை தயாரிப்புக்குப் பின்னர் அவை எந்தப் பகுதியிலிருந்து பெறப்பட்ட கொழுந்தின் மூலம் தயாரிக்கப்பட்டது போன்ற விபரங்கள் எமது தேயிலையின் தரத்துக்கு சான்று பகர்கின்றன" என்றார்.

இலங்கையிலுள்ள 450 தேயிலை ஏற்றுமதியாளர்களில் 3 ஏற்றுமதியாளர்களுக்கே சொந்தமான தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. பொகவந்தலாவையும் அவற்றில் ஒன்றாகும். இதன் மூலம் செலவினம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், சர்வதேச தரத்துக்கு அமைவானதாகவும் தேயிலை தயாரிக்கப்படுகிறது.

பொகவந்தலாவை தேயிலை எஸ்டேட் நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சரத் பெர்னாண்டோ தேயிலையின் தரம் குறித்து கருத்து தெரிவிக்கையில், 'எமது நிறுவனம் HSCCP, BRC food standard, ISO 9001:2000 மற்றும் ISO 22000:2005 போன்றன கிடைத்துள்ளன.

இவை எமது தேயிலையின் தரத்தை உறுதி செய்கிறது. எமக்கு  ளுயு8000 (சமூக பொறுப்பு) சான்றிதழ் பொகவான, நோர்வூட், பொகவந்தலாவை மற்றும் வனராஜா தேயிலை தொழிற்சாலைகளுக்கு கிடைக்கவுள்ளதுடன், பொகவந்தலாவை பெருந்தோட்டப் பகுதியிலுள்ள 7 தோட்டங்களுக்கு நியாயமான விற்பனை பட்டியல்கள் கிடைக்கவுள்ளது என்றார்.

பொகவந்தலாவை தேயிலை எஸ்டேட் கம்பனி இரண்டு வகையான வர்த்தக நாமங்களை கொண்டுள்ளது. சிலோன் ரீ கார்டன்ஸ் மற்றும் பொகவந்தலாவை ரீஸ் என்பனவே அவையாகும். இந்த ரகங்களில் பிளாக் டீ, கிறீன் டீ, ஹேர்பல் டீ, ஓர்கானிக் ரீ, ஃபிளேவர்ட் ரீ மற்றும் ஐஸ்ட் ரீ போன்றன ஏற்றுமதித்  தரங்களுக்கமைய தயாரிக்கப்படுகின்றன. பிரித்தானியா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதுடன், அமெரிக்கா, லித்துவேனியா, ஒல்லாந்து போன்ற நாடுகளில் தமது நாமத்தை பதித்து வருகிறது. மேலும் பல சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளது.

தேயிலை சம்பந்தமான சுற்றுலா மையம் ஒன்றை அமைப்பதிலும் பொகவந்தலாவை தேயிலை எஸ்டேட் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .