2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

எந்நேரமும் ரீலோட் செய்யக்கூடிய வகையில் டிரைடெல்லுடன் எடிசலாட் உடன்படிக்கை

Super User   / 2011 மார்ச் 29 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எடிசலாட் இணைப்புகளை டிரைடெல் தொலைபேசிகளின் மூலம் ரீலோட் செய்து கொள்ளக்கூடிய வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான உடன்படிக்கையில் டிரைடெல் நிறுவனத்துடன் எடிசலாட் கைச்சாத்திட்டுள்ளது. இதன் மூலம் டிரைடெல் தொலைபேசிகளில் சில்லறைக் காசை உட்செலுத்தி எடிசலாட் தொலைபேசிகளை ரீலோட் செய்துகொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான அனைத்து பொது இடங்களிலும் மொத்தமாக 1600க்கும் அதிகமான டிரைடெல் தொலைபேசிகள் காணப்படுகின்றன. எந்நேரமும், எந்நாளிலும் தேவையான அளவுக்கு ரூ.20 முதல் ரீலோட்களை இந்த டிரைடெல் தொலைபேசிகளின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். இந்த இரு நிறுவனங்களுக்குமிடையிலான உடன்படிக்கையின் மூலம் எடிசலாட் முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் அதிகளவு பயன் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சேவை உடன்படிக்கை குறித்து எடிசலாட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கருத்து தெரிவிக்கையில், 'இந்த உடன்படிக்கையின் மூலம் வாடிக்கையாளர்களுக்கும் நிறுவனத்தின் நீண்ட கால செயற்பாடுகளுக்கும் பெரும் உதவியாக அமையும். இதன் மூலம் வாடிக்கையாளர் சேவைகள் மேலும் விரிவடைந்துள்ளது. 24 மணி நேரமும் வாரத்தின் 7 நாட்களுக்கும் எமது சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு முடிந்துள்ளது. தற்போது எடிசலாட் மாத்திரமே இலங்கையில் இது போன்ற ஒரு உன்னத சேவை அறிமுகப்படுத்தியுள்ளது' என்றார்.

டிரைடெல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நிஹால் ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில், 'எடிசலாட் நிறுவனத்துடன் இந்த உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளதையிட்டு நாம் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். இதன் மூலம் இலங்கையர்களுக்கு இலகுவானதும் வசதியானதும் சேவையை எம்மால் வழங்க முடியும்' என்றார்.

இலங்கையின் தொலைத்தொடர்புகள் துறையில் சக்திவாய்ந்த நிறுவனமான எடிசலாட், தொடர்ந்தும் இத்துறையில் புதிய பரிமாணங்களில் கால் பதித்த வண்ணமுள்ளது. அத்துடன், பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகள், விற்பனை கொடுப்பனவுகள், விசேட இணைப்புகள் மற்றும் இதர பல சேவைகளையும் வழங்கி வருகிறது. எடிசலாட், புதிய கண்டுபிடிப்புகள், தரம் மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றை வழங்குவதில் முன்னிலையில் திகழ்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .