2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

றிச்சர்ட் பீரிஸ் நிறுவனத்தின் தேசிய உற்பத்தி மற்றும் விநியோக பிரிவுகளின் வருடாந்த ஒன்றுகூடல்

A.P.Mathan   / 2011 ஜூன் 23 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

Seated from Left Sunil Shantha (Proprietor - A S L Distributors) /Arunashantha (Proprietor - Kanthi Distributors)/ Athula Wickramatilake (Field Sales Manager)/ Emil Senanayake (Marketing Director - LMD Sector)/ Shantha Kularatne (Director - Distribution) / Dr. Sena Yaddehige (Chairman/CEO)/ Sunil Liyanage (Managing Director - LMD Sector) Lalith Wijesinghe (Director - Flexifoam)/ Duminda Perera (Field Sales Manager) Dulan Pradeep (Proprietor - Dulan Distributors)/ Sundaram Sivarasa (Proprietor - Vinyagar Trading Complex) Standing from Left Nilanka Weerapana (Area Sales Coordinator) / Sameera Perera (Area Sales Executive) / Nilantha Dayanath (Area Sales Executive) / Pubudu Wasantha (Sales Representative)

 

றிச்சர்ட் பீரிஸ் நிறுவனத்தின் தேசிய உற்பத்தி மற்றும் விநியோக பிரிவுகளுக்கான வருடாந்த ஒன்றுகூடலும் விருதுகள் வழங்கும் நிகழ்வும் அண்மையில் கொழும்பு காலி முகத்திடல் ஹோட்டலில் வெகு விமர்சையாக இடம்பெற்றது. “Reaching New Heights” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வின் விசேட அதிதிகளாக றிச்சர்ட் பீரிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களும், தேசிய உற்பத்தி பிரிவின் முகாமைத்துவ பணிப்பாளர் சுனில் லியனகே மற்றும் விநியோகப்பிரிவின் பணிப்பாளர் சாந்த குலரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

“Knight’s Night” என அழைக்கப்படும் றிச்சர்ட் பீரிஸ் நிறுவனத்தின் தேசிய உற்பத்தி மற்றும் விநியோக பிரிவுகளின் இவ்வாண்டின் வருடாந்த விருது வழங்கும் நிகழ்வில் விநியோக அதிகாரிகள் 100இற்கும் அதிகமானோருக்கும், விநியோக பிரிவில் கடந்த ஆண்டில் சிறப்பாக கடமையாற்றிய அதிகாரிகளுக்கும் கேடயங்களும், பணப் பரிசுகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா வாய்ப்புகளும் வழங்கப்பட்டன.

சிறப்பான விநியோகம் மற்றும் சிறப்பான செயற்பாடு எனும் இரு பிரிவுகளில் இவ்வாண்டின் விருது வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது. சிறப்பான விநியோகம் பிரிவில் தங்க விருதை வவுனியா விநாயகர் டிரேட் சென்டர் (வீட்டுப்பாவனைப் பொருட்கள் மற்றும் ஹாட்வெயார் பொருட்கள்), மினுவான்கொட துலான் டிஸ்ரிபியூட்டர்ஸ் (ஹாட்வெயார்), அஹாங்கம காந்தி டிஸ்ரிபியூட்டர்ஸ் (வீட்டுப்பாவனைப் பொருட்கள்), கடுநேரிய ஏ.எஸ்.எல். டிஸ்ரிபியூட்டர்ஸ் (பீவிசி பிரிவு) போன்ற நிறுவனங்கள் வென்றிருந்தன. அதுபோன்று சிறப்பான செயற்பாட்டு பிரிவில் தங்க விருதை மாத்தளை பிராந்தியத்தின் வீட்டுப்பாவனை பொருட்கள் மற்றும் ஹாட்வெயார் பொருட்களுக்கான நிலங்கா வீரபன, மினுவான்கொட பிராந்தியத்தின் ஹாட்வெயார் பொருட்களுக்கான நிலந்த தயாநாத், அஹாங்கம பிராந்தியத்தின் வீட்டுப்பாவனை பொருட்களுக்கான புபுது வசந்த, கடுநேரிய பிராந்தியத்தின் பிவீசி பிரிவுக்கான சமீர பெரேரா ஆகியோர் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் வடக்கு கிழக்கு பகுதிகள் உள்ளடங்கலாக கடந்து ஆண்டு உற்பத்தி மற்றும் விநியோக பிரிவுகளில் முழு அர்ப்பணிப்புடன் செயலாற்றிய அனைத்து தரப்பினருக்கும் தமக்கான பாராட்டல்களை இந்த நிகழ்வில் பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் றிச்சர்ட் பீரிஸ் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி சேன யத்தெஹிகே கருத்து தெரிவிக்கையில் 'இந்நாட்டின் முன்னணி உள்நாட்டு நிறுவனமாக ஆர்பிகோ கடந்த ஆண்டில் 27.2 பில்லியன் ரூபாவை வருமானமாக பெற்றுக் கொண்டுள்ளதன் மூலம் இந்நாட்டிலுள்ள சிறப்பாக செயலாற்றும் நிறுவனமாக தெரிவாகியுள்ளோம். நிறுவனத்தின் இந்த வருமானத்தில் பெரும் பங்கை உற்பத்தி மற்றும் விநியோக பிரிவு வகித்திருந்தது, இங்கு குழுமியிருக்கும் எமது நிறுவனத்தின் அனைத்து அர்ப்பணிப்பான விநியோகத்தர் மற்றும் உற்பத்;தியாளர்களின் பங்களிப்பின் மூலம் எமது வருமானம் 50 வீதத்தால் அதிகரித்துள்ளது' என்றார்.

இந்நிகழ்வில் றிச்சர்ட் பீரிஸ் நிறுவனத்தின் தேசிய உற்பத்தி பிரிவின் முகாமைத்துவ பணிப்பாளர் சுனில் லியனகே கருத்து தெரிவிக்கையில் 'எமது பிரதான தயாரிப்புகளாக நீர்தாங்கிகள், நீர்பம்புகள், ரெஜிபோம்கள், இறப்பர் தயாரிப்புகள் மற்றும் வீட்டுப்பாவனைப் பொருட்களை குறிப்பிட முடியும். இவை அனைத்தும் சர்வதேச தரங்களுக்கமைவாக தயாரித்து எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி அவர்களின் நம்பிக்கையை வென்றுள்ளமை எமக்கு பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. உற்பத்தி பிரிவை போன்று விநியோகப் பிரிவும் எமக்கு பெரும் பலம் சேர்ந்துள்ளது' என்றார்.

விநியோகப்பிரிவின் பணிப்பாளர் சாந்த குலரத்ன உரையாற்றுகையில் 'உயர் உற்பத்தி மற்றும் சேவை தரங்களுக்கமைவாக தயாரிக்கப்படும் எமது உற்பத்திகளுக்கு ISO 9001 மற்றும் SLS தரச் சான்றிதழ்கள் கிடைத்துள்ளமை விசேட அம்சங்களாகும். அத்துடன் எமது நிறுவனத்தின் இதர முக்கிய சிரேஷ்ட முகாமையாளர்களான துமிந்த பெரேரா மற்றும் அதுல விக்ரமதிலக ஆகியோரின் அர்ப்பணிப்பான செயற்பாடும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது' என்றார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .